சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் தேசிய போதைப்பொருட்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் (Tis Hazari court) வக்கீல்களுக்கும் டெல்லி காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வக்கீல்கள் இன்று வேலைநிறுத்த போரட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற டெல்லி காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் இடையே வன்முறை மோதல் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குற்றப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் கூட்டு போலீஸ் கமிஷனர் (Jt. CP) தலைமையில் ஒரு SIT அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு போலீஸ்காரர் கடமையில் இருக்கும்போதோ அல்லது அவரது சொந்த வாகனத்தில் செல்லும்போதோ போக்குவரத்து விதிகளை மீறினால், அவர்கள் இரண்டு மடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆன்மீகவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான குரு ரவிதாஸ் அவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட ஆலயம் டில்லியின் துக்ளாகாபாத் பகுதியில் அமைந்திருந்தது. அந்த ஆலயத்தை கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவின்படி டில்லி மேம்பாட்டு ஆணையம் இடித்து தள்ளியது.
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்களே பயன்படுத்தப்படும்; வாக்குச்சீட்டு முறைக்கு மாறும் எண்ணம் இல்லை என தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார்!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறித்து பொய்யான விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என டெல்லி போலீசாருக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.