ராகுல் காந்தியின் டிவிட்டர் ஹாக் செய்த நபரிடமிருந்து டெல்லி துணை கமிஷ்னர் சைபர் கிரைமுக்கு இன்று பதில் வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த டிவிட்டர் ஹாக்கிங் ஐந்து நாடுகளிலிருந்து செயல் படுவதாக தகவல் வந்துள்ளது.
டெல்லியில் சத் பூஜை என்ற பெயரில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் விதிமீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ரீத்துராஜ் கோவிந்த் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஓய்வுபெற்ற ராணுவத்தினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் என்பவரும் பங்கேற்றிருந்தார். போராட்டத்தின் போது அவர் தனது குடும்பத்தாரை கைபேசி மூலம் தொடர்புகொண்டு ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரத்தில் ராஜ்யசபா உறுப்பினரின் உதவியாளருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரியான மெஹமூத் அக்தர், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவ விவரங்களைத் திரட்டி தகவல் அளித்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் டெல்லியில் உள்ள பாக்கிஸ்தான் துணைத் தூதர் அதிகாரிகளை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியா மெகமூத் அக்தருடன் கைது செய்யப்பட்ட மவுலானா ரம்ஜான், சுபாஷ் ஜாங்கிர் ஆகிய இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளனர். இதையடுத்து, மெஹமூத் அக்தரை இந்தியாவில் இருக்கத் தகுதியற்ற நபர் என்று அறிவித்த மத்திய அரசு 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாக்கிஸ்தான் துணைத் தூதர் அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் காணவில்லை. காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜே.என்.யு. மாணவர்கள் கூறுகின்றனர்
டெல்லியில் தனியார் ஐ.டி நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பணியாற்றியவர் ஜிகிஷா கோஷ் (28). இவரை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நடிகர் அமீர்கான் தயாரித்த பாலிவுட் படமான ’பெப்லி லவ்’ படத்தின் இணை இயக்குனர் மகமூத் பாரூக்கி. இந்தியாவிற்கு ஆராய்ச்சிக்கு வந்த அமெரிக்காவை சேர்ந்த மாணவி ஒருவரை கற்பழித்ததாக டெல்லி போலீசார் இவரை கைது செய்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மகமூத் பாரூக்கி குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.
மகமூத் பாரூக்கிக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வருகிகிற 2 ம் தேதி அறிவிக்கப்படும் என டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் மீது டெல்லி பெருநகர போலீஸார் பாலியல் அத்துமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் பெண் ஒருவர் பிரகாஷ் ஜார்வால் மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பிரகாஷ் ஜார்வால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் சங்கம் விஹார் பக்தியில் கடந்த ஜூன் 23ஆம் தேதி தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ தினேஷ் மொஹனியா தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது மந்திரி மொஹானியாவை கைது செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.