டெல்லியில் ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏ. கைது!!

டெல்லியில் சத் பூஜை என்ற பெயரில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் விதிமீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ரீத்துராஜ் கோவிந்த் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Last Updated : Nov 6, 2016, 04:04 PM IST
டெல்லியில் ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏ. கைது!! title=

புதுடெல்லி: டெல்லியில் சத் பூஜை என்ற பெயரில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் விதிமீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ரீத்துராஜ் கோவிந்த் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த ஆண்டு சட்பூஜைக்கு டெல்லி தயாராகிவரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ரிட்டுராஜ் கோவிந்த் என்பவர் தனது தொகுதியான கிராரியில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையில் ஆற்றங்கரை ஓரத்தில் கண்மாய் ஒன்றை கட்ட முயன்றார்.

யமுனை ஆற்றின் கரையில் பூஜை செய்ய முயற்சித்த அவரை  போலீசார் கைது செய்துள்ளனர்  என ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ரீத்துராஜ் கோவிந்த் கூறினார்.  

சட்டப்படி அனுமதியில்லாத அந்த பகுதியில் படிகள் அமைக்க அவர் முயற்சித்துள்ளார்.  அந்த பகுதியினை சத் பூஜைக்காக பயன்படுத்தி கொள்வதற்கு உள்ளூர்வாசிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என போலீசார் கூறினர்.

ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் விவகாரத்தில் டெல்லியில் பூங்கா ஒன்றில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரெவாலின் குடும்பத்தினை காண சென்றதற்காக டெல்லி முதல் மந்திரியான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா இருவரும் போலீசாரின் காவலில் வைக்கப்பட்டனர்.  இந்த கைது நடவடிக்கை நடந்த 3 நாட்களுக்குள் அக்கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.

குறைந்தபட்சம் 13ஆம் ஆத்மி எம் எல் ஏ க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 13 பேரில் 9 பேருக்கு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

Trending News