ரசிகைக்கு உதட்டில் இச் கொடுத்த பாடகர் உதித் நாராயண்! வைரல் வீடியோ..

Viral Video Of Singer Udit Narayan Kissing A Fan : இந்திய திரையுலகின் பிரபல பாடகர் உதித் நாராயண், ரசிகைக்கு உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - Yuvashree | Last Updated : Feb 1, 2025, 05:52 PM IST
  • ரசிகைக்கு முத்தம் கொடுத்த உதித் நாராயண்
  • வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • இப்படியொரு வேலைய செஞ்சிட்டாரே!
ரசிகைக்கு உதட்டில் இச் கொடுத்த பாடகர் உதித் நாராயண்! வைரல் வீடியோ.. title=

Viral Video Of Singer Udit Narayan Kissing A Fan : பிரபலங்கள் பலர் சமீப காலமாக செய்யும் சில விஷயங்கள் இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்துவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் ஒரு சர்ச்சையில் மாட்டியிருப்பவர்தான், பிரபல பாடகர் உதித் நாராயண்.

உதித் நாராயண்:

இந்தியாவின்  பிரபல பாடகர்களுள் ஒருவராக விளங்குபவர், உதித் நாராயன். 90ஸ் மற்றும் அதற்கு பிந்தைய கால கட்டங்களில் இவர் குரலில் பல பாடல்கள் ஒலித்திருக்கின்றன. இவரது தாய்மொழி, இந்தி ஆகும். இவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. ஆனால், தமிழ் தெரியாதவர்களை அழைத்து தமிழ் பாட்டு பாட வைத்தது கோலிவுட்டில் ஒரு ட்ரெண்டாக இருந்து வந்தது. அப்படி, “தேன்  தேன் தேன், ஒரு வானவில்லின் பக்கத்தில்” போன்ற பல பாடல்களை பாடி பிரபலமானவர், உதித் நாராயண்.

பல பாடகர்கள், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இணை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அப்படி, உதித் நாராயணும் உலகளவில் பல நாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். அப்படி, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரல் வீடியோ:

உதித் நாராயண், டிப் பார்சா பானி என்ற பாடலை மேடையில் பாடிக்கொண்டிருந்தார். மேடையின் அருகே இருக்கும் ரசிகர்கள், மேடை மேல் நிற்கும் பிரபலங்கள் அல்லது பாடகர்களிடம் செல்ஃபி கேட்பது வழக்கம். அது போல, உதித்திடமும், ஒரு ரசிகை, செல்ஃபி கேட்டு அருகே வந்தார். அப்போது செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த அந்த ரசிகை உதித்திற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இதை எதிர்பார்க்காத உதித், அதிர்ச்சியாவார் என்று பார்த்தால், குஷியாக, தனது வாயுடன் வாய் வைத்து அந்த ரசிகைக்கு முத்தம் கொடுத்து விட்டார். இதைப்பார்த்து அங்கிருந்த ரசிகர்கள் கத்தி உற்சாகப்படுத்தினர். அந்த பெண்ணும் சிரித்துக்கொண்டே சென்று விட்டார். இது, சில மணி நேரத்தில் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, தற்போது ஒரு பெரிய விவாதமே நடைப்பெற்று வருகிறது.

உதித் நாராயண் மீது பெரிய அளவில் மரியாதை வைத்திருந்த பல ரசிகர்கள், இவர் செய்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறி வருகின்றனர். ஒரு சிலர், “இது AI-ஆக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்” என்றும் கூறி வருகின்றனர். இதனால், உதித்தை பலர் ட்ரோல் செய்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | குடித்து விட்டு ரகளை செய்த ஜெயிலர் பட வில்லன்! வைரல் வீடியோ..

மேலும் படிக்க | பாம்பை கழுத்தில் சுத்திக்கொண்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ..

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News