குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் இப்போது மட்டும் ஏன் விதிமுறைகளை விதிக்கின்றனர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், 356 சட்டப்பிரிவின்படி திமுக ஆட்சியை கலைத்தால் மக்கள் ஆனந்தம் அடைவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.
யானை தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு 5 லட்சம் நிவாரணம், கட்டிடத்தொழிலாளி பணியின் போது தவறி விழுந்தால் 3 லட்சம் நிவாரணம் ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி ஊக்குவிக்கிறார்கள் என்றால் ஸ்டாலின் தான் தலைசிறந்த முதல்வர் என்பதை காட்டுகிறது என்றும், வேறு விமர்சிக்க முடியவில்லை, எனவும் கூறினார்.
ஒவ்வொரு துறையிலும் தனித்துவமான முத்திரைகளைப் பதித்து பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது திராவிட மாடல் அரசு. இந்த ஆட்சியில் எளிய மக்களுக்கு ஏற்றம் தந்த 7 திட்டங்களைப் பார்க்கலாம்.
தானியங்கி மது இயந்திரம் அதிமுக ஆட்சி காலத்திலேயே திறக்கப்பப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு போகாதா அன்புமணி ராமதாஸ் தவறான தகவலை வெளியிடுகிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
Udhayanidhi Stalin: வருமான வரித்துறை சோதனை போன்ற எந்த சவால்களையும் நாங்கள் எதிர்கொள்ள தயார் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பதிவேற்பதாக வெளியான தகவல் குறித்தும் பதிலளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 மணி நேர வேலை தீர்மானத்தை, திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது மட்டும் எதற்காக எதிர்த்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சட்டத்தால் எல்லோருக்கும் பாதிப்பு இல்லை என்றும் தற்போது உள்ள நடைமுறைகள் தொடர்ந்து இருக்கும் என்றும் தொழிலாளர் நலத்துறை சி.வி. கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.
தொழிலாளர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தப்படுவது தொடர்பான சட்ட மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
New 12 Working Hours Bill: தொழிலாளர்களின் பணி நேரத்தை எட்டு மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தப்படுவது தொடர்பான சட்ட மசோதா திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தாரை சந்தித்து, சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் நிதியுதவி வழங்கினார்.
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது மட்டுமின்றி அரசு சொட்டு நீர் பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள், சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, இணைமின் திட்டம் வழங்குவது போன்ற பல வசதிகளை திமுக அரசு செய்து வருகிறது.
தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தொடங்கி, மகளிருக்கு இலவச பேருந்து வசதி, அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை என பல சிறப்பான திட்டங்களை திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.