Senthil Balaji Dismissed From Cabinet: தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கி ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், 356 சட்டப்பிரிவின்படி திமுக ஆட்சியை கலைத்தால் மக்கள் ஆனந்தம் அடைவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழியாக வந்த தமிழக ஆளுநர் மொழியாலும் இனத்தாலும் நாட்டை பிளவு படுத்துவதை சகித்து கொள்ள முடியாது என விருதுநகரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
Minister Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர ஆளுநர் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர் இலாக்கா இல்லா அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.
Governor RN Ravi: அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு மாற்ற ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தொடரகோரும் தமிழக அரசின் கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி கொடுக்காமல் கிடப்பில் போட்டிருப்பது ஏன்? என்று அமைச்சர் பொன்முடி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Senthil Balaji Latest Update: கைதாகியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த நிலையில், அதை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்க மறுத்துவிட்டதாக அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.
AIADMK Sellur Raju: ஆளுநர் ஒரு மாநில கட்சியில் பிரதிநிதியாக வெளிக்காட்டுகின்ற அளவில் பேசுகிறார் என்றும் அவரின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
MHC Chief Justice SV Gangapurwala: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
TRB Raja Sworn In As Minister: மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினரான டிஆர்பி ராஜா, தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பதவி பிரமாண உறுதி மொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டார்.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி யாருடைய கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின், பயமுறுத்த நினைப்பதெல்லாம் இங்கு எடுபடாது என காரசாரமாக பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசு மீது பிரச்னை இருந்தால், அதனை ஆளுநர் நேரடியாக அமைச்சர்களை சந்தித்து பேசலாம், அரசியல்வாதிகளை போல செயல்பட கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Dravidian Model Controversy: உயர்கல்வியில் பெண்களுடைய பங்களிப்பில் இந்தியாவின் சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக இருப்பதாகவும், இதுதான் திராவிட மாடலின் வெற்றி என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் ஆளுநர், முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் ஒரே காலகட்டத்தில் டெல்லியில் முகாமிட உள்ளது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Governor RN Ravi On Fishermen Issue: மீனவர்கள் எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் மீனவர்களுக்காக தன் வீட்டுக்கதவு எப்போதும் திறந்திருக்கும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி மீனவர்களிடையே பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.