ஆளுநருக்கு ரூ.5 கோடி எல்லாம் கொடுக்க முடியாது - பிடிஆர் அதிரடி

ஆளுநருக்கு கொடுக்கும் ரூ.5 கோடி நிதி எல்லாம் கொடுக்க முடியாது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜ் அதிரடியாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 20, 2023, 10:15 AM IST
ஆளுநருக்கு ரூ.5 கோடி எல்லாம் கொடுக்க முடியாது - பிடிஆர் அதிரடி title=

வேல்முருகன் கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநருக்கு வழங்கப்படும் நிதி குறித்து பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,  "ஆளுநரின் செலவு பற்றி 5 கவன ஈர்ப்புகள் என்னிடம் வந்திருக்கிறது.  எஸ்.எஸ்.பாலாஜி, முகமது ஷானவாஸ், எழிலன், டி.ஆர்.பி.ராஜா, வேல்முருகன் ஆகியோர் கொடுத்திருக்கிறார்கள். ஆளுநரின் செயல்பாட்டை தொடாமல், நிதி மேலாண்மை பற்றி மட்டும் பேசுகிறேன்.

மேலும் படிக்க | அண்ணாமலை ஒரு நகைச்சுவை மன்னர் - தொல். திருமாவளவன்!

பிடிஆர் பதில்

கடந்த ஆட்சி காலத்தில் ஆளுநரின் செயலாளர் நிதி கேட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை முறையில்லாத கடிதம் என்றே நான் சொல்வேன். இது எப்படி ஜனநாயக நாட்டில் செல்லும். காரணமில்லாமல் ரூ.5 கோடி செலவுக்கு எப்படி வழங்க முடியும். ஜனவரி முதல் மார்ச் வரை 2 மாத செலவுக்கு ரூ.2 கோடி கேட்டிக்கிறார். அமைச்சர் கையெழுத்து இல்லாமல், அன்றைய நிதித் துறை செயலாளரே முடிவெடுத்து அந்த தொகையை வழங்கியுள்ளார். கொள்கை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் தொகை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஆண்டு ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஆளுநர் வரவு செலவு

அட்சய பாத்திரம் திட்டத்துக்கு என்று சொல்லி, ஆளுநரின் வீட்டு கணக்குக்கு நிதி போயிருக்கிறது. அந்த திட்டத்துக்கு ரூ.4 கோடியே 49 லட்சம் கொடுக்கப்பட்டதாக கவர்னரின் செயலாளர் சொல்கிறார். ஆனால், அதற்கான கோப்புகள் இல்லை. 2021-ம் ஆண்டு புதிய ஆளுநர் வந்தபிறகு, 17 கோப்புகளின் அடிப்படையில் நாம் நிதி ஒதுக்கி உள்ளோம். சுதந்திர தின விழாவுக்கு ரூ.25 லட்சம், சுற்றுப் பயணத்துக்கு ரூ.15 லட்சம், அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு ரூ.10 லட்சம், கிறிஸ்துமஸ் விழாவுக்கு ரூ.25 லட்சம், குடியரசு தினவிழாவுக்கு ரூ.20 லட்சம் என நிதி வழங்கப்பட்டுள்ளது.

நிதி கொடுக்க முடியாது

நாட்டில் எந்த மாநிலத்திலும் உள்ள கவர்னர்களுக்கு இவ்வளவு நிதியும், கூடுதல் சலுகையும் வழங்கப்படவில்லை. எந்த துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை ஓராண்டுக்குள் செலவு செய்யாவிட்டால், அடுத்த ஆண்டு அந்த தொகையை கேட்கக்கூடாது என சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆளுநர் ரூ.3 கோடிதான் செலவு செய்து உள்ளார். எனவே, ரூ.5 கோடி வழங்கப்படாது. லண்டனில்தான் மன்னர் ஆட்சி உள்ளது. அங்கு மன்னர்களின் செலவுக்கான நிதியை என்ன செய்தார்கள்? என்று கேட்க முடியாது. ஆனால் இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் விதிமுறைகளின் படிதான் செலவு செய்ய முடியும். மேலும் முதல் 2 நிதியாண்டுகளை தவிர அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்படவில்லை " என பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். 

மேலும் படிக்க | அண்ணாமலை மீது அடுத்து வழக்கு தொடரப்போகும் திமுகவின் முக்கிய புள்ளி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News