உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்பது உறுதியாகி விட்ட நிலையில், அணித்தேர்வு இன்று நடைபெற்றது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை அறிவித்தனர்.
ஐசிசி வருவாய் பகிர்வு முறையில் செய்திருக்கும் மாற்றத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் அடுத்த 8 ஆண்டுகளுக்கு ஐசிசி-யிடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கும் வருவாயில் ரூ.1,775 கோடி அளவுக்கு ‘வெட்டு’ விழுகிறது.
இதையடுத்து ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணித்து ஐசிசி-க்கு பதிலடி கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.
சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஷசாங் மனோகர் இன்று ராஜினாமா செய்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த ஷசாங் மனோகர் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், தன்னுடைய பதவியிலிருந்து இன்று அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் கூறியதாவது:-
சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கனவு அணியை அறிவித்து உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் ஐசிசி கனவு அணியை ஆண்டு கடைசியில் அறிவிப்பது வழக்கம். 2016-ம் ஆண்டிற்கான ஐசிசி கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களை பார்ப்போம்.
டெஸ்ட் அணியில் விவரம்:-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2016-ம் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு
ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2016-ம் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை அஸ்வின் பெறுகிறார்.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கனவு அணியை அறிவித்து உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் ஐசிசி கனவு அணியை ஆண்டு கடைசியில் அறிவிப்பது வழக்கம். 2016-ம் ஆண்டிற்கான ஐசிசி கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களை பார்ப்போம்.
டெஸ்ட் அணியில் விவரம்:-
பி.சி.சி.ஐ., மீதான தீர்ப்பை வரும் 17-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.
நீதிபதி லோதா தலைமையிலான குழு பி.சி.சி.ஐ.,க்கு பல்வேறு பரிந்துரைகள் செய்தது. இதை அமல்படுத்த பி.சி.சி.ஐ., தயக்கம் காட்டியது. இதனால், பி.சி.சி.ஐ., நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என லோதா குழு சார்பில் கூறப்பட்டது.
லோதா குழு நடவடிக்கை காரணமாக நியூசிலாந்து தொடர் நடப்பதில் சிக்கல்.
சுப்ரீம் கோர்ட் அமைத்த லோதா குழு பி.சி.சி.ஐ.,யில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. ஆனால் பி.சி.சி.ஐ., இதனை நிறைவேற்ற இதுவரை தயக்கம் காட்டி வருகிறது. இதனையடுத்து பரிந்துரை செய்யப்பட்ட மாற்றங்களை பி.சி.சி.ஐ., நிறைவேற்றவில்லை, எனவே பொறுப்பில் உள்ளவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் லோதா குழு கூறியுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட டோணி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே சென்றுள்ளது. இரு அணிகளும் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில்தான் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும்.
முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வென்றது.
கயானாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிஹார்டியன் 62 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஆம்லா 35, குயின்டன் டி காக் 18, ரோஸவ் 7, டி வில்லியர்ஸ் 22, டுமினி 13, பார்னல் 2 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல், ஹஸல்வுட், நாதன் கவுல்டர் நைல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடக்க விருக்கும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணியும் பங்கேற்கிறது. இதற்கான போட்டி அட்டவணை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.
2017-ம் ஆண்டுகான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். நேற்று இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் யார் யாருடன் எப்போது மோதுகின்றனர் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. அதில் 2-ம் இடத்தை தக்கவைத்துக்கொண்டார் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.
உலக டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தையும், இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.