மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
காமராஜர் சாலையில் இருந்த நடிகர் சிவாஜி சிலை கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி அகற்றப்பட்டது. மேலும் அகற்றப்பட்ட அந்த சிலை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரை எதிரில் நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவச் சிலை காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் சிலையை அகற்றும்படி கோர்ட் தீர்ப்பளித்தது.
காமராஜர் சாலையில் இருந்த நடிகர் சிவாஜி சிலை நேற்று நள்ளிரவில் அகற்றப்பட்டது. மேலும் அகற்றப்பட்ட அந்த சிலை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை எதிரில் நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவச் சிலை காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் சிலையை அகற்றும்படி கோர்ட் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து அகற்றப்படும் சிவாஜி சிலை, அடையாறு அருகே கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதைக் கண்டித்து மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் போராட்டம் முடிவடையும் நிலையில் போலீசாருடன் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வன்முறை சம்பவங்கள் நடந்தன.
சட்டசபை சிறப்பு கூட்டத்தில், ஜல்லிக்கட்டுக்கு அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வகை செய்யும் நிரந்தர சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும், விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி உலகம் எங்கும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
நிரந்தர சட்டம் கொண்டு வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு வசதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாகவும், ஓரிரு நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.