ஹஜ் புனித பயணத்திற்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்தது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரி-ன் 101-வது இன்று அனுசரிக்கப்டுகிறது. அவரின் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் தமிழகம் அவருக்கு மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது!
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வீண் செலவு மற்றும் கட் - அவுட்களால் பொது மக்கள் அவதி படுவதால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு மிக மோசமான காலக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப் போன்று தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் அவற்றைத் தீர்க்க வேண்டிய ஆட்சியாளர்கள் மக்களின் வரிப் பணத்தில் தங்களின் புகழ்பாடும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களை நினைவு கூறும் வகையில் ‘எம்ஜிஆர் நூற்றாண்டு விழா’ அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று சிவகாசியில் ‘எம்ஜிஆர் நூற்றாண்டு விழா’ நடைபெற உள்ளது!
இவ்விழாவினில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே சிவகாசி நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
முன்னதாக சேலம், அரியலூர் மாவட்டங்களில் ‘எம்ஜிஆர் நூற்றாண்டு விழா’விமர்சையாக கொண்டாடப் பட்டது குறிப்பிடத்தக்கது!
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
முன்னதாக ’மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குனர் நாராயணன்; சென்னை உயர் நீதிமன்றம் ‘அரசு சார்பில் கொண்டாடப்படும் விழாக்களில் கூட்டத்தை காண்பிப்பதற்காக அரசுப்பள்ளி மாணவ-மாணவியரை அழைத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும்’ என மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.