சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தனது ட்விட்டர் கணக்கில் இருந்து superstar வார்த்தையினை நீக்கியுள்ளார்!
தமிழக அரசியல் களத்தில் வெற்றிடம் நிலவுவதாகவும், அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்சிகள் பல, கொள்கைகள் சில என்றாகிவிட்ட தமிழக அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தனது "மக்கள் நீதி மய்யம்" அரசியல் கட்சியினை குறித்து அறிவித்தார். இவருக்கும் முன்னதாக இருந்து அரசியலில் களமிரங்க உள்ளதாக தெரிவித்து வந்த ரஜினிகாந்த் அவர்கள் கடந்த மார்ச் 5 ஆம் நாள் மக்களின் மத்தியில் தனது அரசியல் கட்சி குறித்து தெரிவித்ததோடு, தன்னால் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியை அளிக்க முடியும் என உறுதி அளித்துள்ளார்.
மூத்த அரசியல் தலைவர்கள் தங்களது ஆயுதாமாக வார்த்தை யுக்திகளை பயன்படுத்தி வரும் நிலையில், நம் புது தலைவர்கள் ட்விட்டரினையே ஆயுதமாக மாற்றியுள்ளனர். (சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தினை துவங்கியது குறிப்பிடத்தகத்து)
நடிகர் கமலஹாசன் அவர்களும் தனது கட்சியினை ஆரம்பித்த அன்றே அக்கட்சிக்கு ட்விட்டர் கணக்கு ஒன்றினை ஆரம்பித்துவிட்டார். விரைவில் ரஜினிகாந்த அவர்களின் கட்சிக்கும் புது ட்விட்டர் கணக்கு வரலாம், ஆனால் அதற்கு முன்னர் தற்போது இருக்கும் தனிநபர் கணக்கினை பொதுவாக மாற்றுவோம் என தனது ட்விட்டர் கணக்கில் இருந்து superstar என்னும் (திரையுலகில் தனக்கு கிடைத்த அடைமொழிப் பெயர்) அடைமொழிப் பெயரினை நீக்கியுள்ளார்.
விரைவில் அரசியல் அடைமொழி வரவிருக்கும் நிலையில் திரையுலக அடைமொழி வேண்டாம் என நினைத்துவிட்டார் போல!