தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. தி.மு.க. கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.
நடந்து முடிந்த புதுச்சேரி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான திமுக 2 இடங்களையும் கைப்பற்றின. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தது.
எனவே காங்கிரஸ்-திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் முதல்வராக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடிப்பதால் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்துள்ளன. திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
சென்னையில் உள்ள அறிவாலயத்தில் நடந்த திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக தேர்தலில் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் தலைகீழாக மாறியுள்ளன. இதற்கான காரணங்கள் என்ன? தமிழக தேர்தலில் நடந்தவை என்ன?
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தலில் தோல்வியடைந்தது எதனால்? என்பவற்றை அரசியற்களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டவாளரும் ஊடகவியலாளருமான எம்.எம்.நிலாம்டீன் விளக்குகிறார்.
தமிழக தேர்தலில் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் தலைகீழாக மாறியுள்ளன. இதற்கான காரணங்கள் என்ன? தமிழக தேர்தலில் நடந்தவை என்ன?
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தலில் தோல்வியடைந்தது எதனால்? என்பவற்றை அரசியற்களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டவாளரும் ஊடகவியலாளருமான எம்.எம்.நிலாம்டீன் விளக்குகிறார்.
கேரள சட்டப் பேரவைக்கு மே 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டன.
மே 19ம் தேதி பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 91 இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஒரு இடத்தில் பாஜகவும் மற்றொரு இடத்தில் இதர கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் ஏப்ரல் 4-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரை நடைபெற்றது. 294 இடங்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் ஆறு கட்டங்களாக நடந்தது.
இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது. இடதுசாரி கட்சிகளுடேன் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மற்றும் பாரதீய ஜனதாவும் போட்டியிட்டன.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 98 இடங்கள் வென்ற தி.மு.க. எதிர் கட்சியாக செயல்படும்.
தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 174 தொகுதிகளிலும், காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 19 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகளின் 7 வேட்பாளர்களும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வருவதால் தொண்டர்கள் மகிழ்சியில் உள்ளனர்.
அதிமுக அலுவலகம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு ஆயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். மேலும் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அதிமுக அலுவலகம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு விழாக்கோலம் பூண்டுள்ளது.
அடுத்த முதல்வர் "எங்கள் அம்மா" தான் என்று தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகி்ன்றனர்.
இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிகின்றன தொண்டர்கள்.
சட்டமன்ற தேர்தல் புதுச்சேரி உட்பட அசாம், கேரளா, தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்து முடிந்தது.
தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும்..
மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும், அசாமில் 2 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.
புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளது. வாக்கு எண்ணிக்கை காலையில் தொடங்கியது.
காங்கிரஸ் திமுக கூட்டணி மொத்தம் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது காங்கிரஸ் 15 இடங்களையும் திமுக 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
தமிழக தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைத்துகொள்ளும் என உறுதியான தகவல்கள் வருகின்றன.
செல்வி ஜெயலலிதா பேட்டி பற்றி:-
>வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அதிமுகவுக்கு மக்கள் அளித்துள்ளனர்.
>தமிழக மக்களின் மீது நான் அளவற்ற நம்பிக்கை வைத்து உள்ளேன்.
>மக்கள் குரலே மகேசன் குரல்... தமிழக மக்கள் என்னை கைவிடவில்லை.
>தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல தமிழ் அகராதியில் வாரத்தையே இல்லை.
> என்னுடைய வாழ்வு முழுவதும் தமிழக மக்களுக்கு அற்பணிக்கப்பட்டது.
திருவாரூர் தொகுதியில் போட்டிட்ட திமுக முதலைமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் 68,366 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,21,473 ஆகும்.
இரண்டாவது இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் 53,107 வாக்குகள் பெற்றுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைக்கிறது என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
திமுகவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
சட்டமன்ற தேர்தல் தமிழகம் உட்பட புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்து முடிந்தது.
தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும். அசாமில் 2 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 தொகுதிகளும், தமிழகத்தில் 232 தொகுதிகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. அதேபோல தமிழகத்தில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
தமிழக தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைத்து கொள்கிறது.
இதைகுறித்து செல்வி ஜெயலலிதா கூறியது:-
>தமிழக மக்களுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டவளாக இருப்பேன்.
>உங்கள் வாக்குகளை அதிமுகவுக்கு போட்டு அமோக வெற்றி அடைய செய்ததுக்கு மனமாற வாழ்த்துகள்.
>மேலும் கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெர்வித்துகொள்கிறேன்.
>தோழமை கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்திலையில் சற்று முன் கிடைத்த தகவலின் படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது. இப்படி நடந்தால் ஜெயலலிதா சாதனை படைப்பார்.
அதாவது தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்த பெருமை எம்.ஜி.ஆர் மட்டும் சாரும். அவர் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளார். அந்த சாதனையை இதுவரை யாரும் முறியடித்ததில்லை.
இந்திலையில் சற்று முன் கிடைத்த தகவலின் படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது. இப்படி நடந்தால் ஜெயலலிதா புதிய சாதனை படைப்பார்.
அதாவது தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்த பெருமை எம்.ஜி.ஆர் மட்டும் சாரும். அவர் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளார். அந்த சாதனையை இதுவரை யாரும் முறியடித்ததில்லை.
சட்டமன்ற தேர்தல் அசாம் உட்பட புதுச்சேரி, கேரளா, தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்து முடிந்தது.
தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும்..
மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும், அசாமில் 2 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.
126 தொகுதிகள் கொண்ட அசாமில் 1,064 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 81 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவானது.
அங்கு வாக்கு எண்ணிக்கை மும்முரமாக எண்ணப்பட்டு வருகின்றன.
சற்று முன் கிடைத்த தகவலின் படி பாரதீய ஜனதா முன்னிலை வகிக்கிறது..
தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வருவதால் தொண்டர்கள் மகிழ்சியில் உள்ளனர்.
அதிமுக அலுவலகம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு ஆயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். மேலும் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அதிமுக அலுவலகம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு விழாக்கோலம் பூண்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது திமுக உள்ளது. முன்றாவதாக பாமக உள்ளது. தேமுதிக மற்றும் மக்கள் கூட்டனி ஒரு இடங்களில் கூட முன்னணியில் இல்லை.
முதல்வர் வேட்பாளர்கள் அவரவர் தொகுதியின் நிலவரங்கள்
>திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை..
>ஆர்.கே நகரில் செல்வி ஜெயலலிதா முன்னிலை..
>ஸ்டாலின் அவர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
>அன்புமணி முன்னிலை..
>சீமான் அவர்களும் பின்னடைவு..
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது திமுக உள்ளது. அதிமுக சார்பாக போட்டியிட்ட சரத்குமார் திமுக வேட்பாளரை விட குறைந்த வாக்கு பெற்று பின்னிலையில் உள்ளார்
முதல்வர் வேட்பாளர்கள் அவரவர் தொகுதியின் நிலவரங்கள்
>திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை..
>ஆர்.கே நகரில் செல்வி ஜெயலலிதா முன்னிலை..
>ஸ்டாலின் அவர் தொகுதியில் மமுன்னிலை வகிக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.