கர்நாடகா சட்டசபையின் 60-வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கலந்துக்கொள்கிறார்.
ANI தகவலின்படி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருக்கும் கர்நாடக சட்டமன்றமான விதன்சௌதாவின் 60 ஆண்டு நிறைவினையொட்டி சிறப்பு நிகழ்ச்சி “விதன்சௌதா 60” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இன்று ஜனாதிபதி கலந்துக்கொண்டு சிறப்பு உரையாற்ற வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
விழாவினையொட்டி ’விதன்சௌதா’ முழுவதும் மின்விளக்குகளால் அளங்கரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தங்கள் நாட்டின் கடல் எல்லை அருகில் வடகொரியா புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது என ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியிருக்கிறது என அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூறியுள்ளது. ஆனால் ரஷ்யா, இது குறைந்த அளவிலான தூரம் சென்று தாக்கக் கூடியது என கூறியுள்ளது.
ஜப்பான் நாட்டின் கடல் எல்லை அருகில் சோதனை நடத்தப்பட்டதால், அந்நாட்டு பிரதமர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்றனர். முன்னதாக ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை வீரர்களால் அழைத்து வரப்பட்டார்.
25-ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ராம்நாத் கோவிந்த் பதவியேற்கவுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை ஓய்வு பெறுகிறார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களது ஆயுள்காலம் வரை அவர்கள் விரும்பும் பகுதிகளில் வாடகை, மின்சாரம் மற்றும் குடீநீர் கட்டணம் இல்லாமல் வீடு வழங்கப்பட வேண்டும். இதற்காக, டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள பங்களாவில் பிரணாப் முகர்ஜி நாளை குடியேறுகிறார்.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் கடைசி நாள் 28-ம் தேதி ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு தங்கள் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டார்.
பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தரக் கோரி, பா.ஜ.க மாநிலக் கட்சிகளிடம் கேட்டுவருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு தங்கள் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டார்.
பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தரக் கோரி, பா.ஜ.க அனைத்து மாநிலக் கட்சிகளிடம் கேட்டு வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக இன்று ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பாளர் அறிவிப்பை விரைவில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளியிடுகின்றன.
இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்று காஞ்சிபுரம் வருகிறார். அரக்கோணம், 'ராஜாளி' கடற்படை தளத்தின் விமான தளத்தில் இருந்து, கார் மூலம் காஞ்சிபுரத்திற்கு, பகல், 2:00 மணிக்கு வருகிறார்.
தென் கொரியாவின் பெண் அதிபர் பார்க் கியுன் ஹை ஊழலில் சிக்கியதால் கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க மே மாதம் 9-ம் தேதி(செவ்வாய் கிழமை) அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது.
வாராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
வங்கிகளுக்கு பெரும் சுமையாக உள்ள வாராக்கடன்களை வசூலிக்கும் வகையில் வேண்டுமென்றே வங்கிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவசர சட்டத்திற்கு நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டெல்லியில் 64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.
சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டிருந்த ஜோக்கர் திரைப்படம் தேசிய திரைப்பட விருதை பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான விருதும் ஜோக்கர் படம் பெற்றது.
சிறந்த பாடகருக்கான தேிய விருதை சுந்தர் ஐயர் பெற்றார். ஜோக்கர் படத்தில் ஜாஸ் மீனு என்ற பாடல் பாடியதற்காக பாடகர் சுந்தர் ஐயருக்குவிருது வழங்கப்பட்டது.
வைரமுத்து தர்மதுரை படத்தில் இடம் பெற்றுள் எந்த பக்கம் என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசரியர் விருது பெற்றார். இவர் தேசிய விருது பெறுவது 7-வது முறையாகும்.
ஜனாதிபதி தேர்தல் போட்டியில் நான் இல்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்த ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மோகன் பகவத் கூறியதாவது:-
பழைய ரூபாய் நோட்டுகள் 500, 1,000 வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டமசோதாவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த மாதம் 8-ம் தேதி தடை செய்தது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி மாற்றிகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது
பிப்ரவரி 18-ம் தேதி தமிழக சட்டசபையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது திமுக எம்.எல்.ஏ.,க்கள் தாக்கப்பட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கவர்னர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தார்.
அதிமுக சட்டசபை தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ளார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஜனவரி 26-ம் தேதிக்குள் மரணம் அடைந்து விடுவார் என்று இலங்கை ஜோதிடர் விஜிதா ரோகணா விஜேமுனி என்பவர் தெரிவித்து இருந்தார்.
இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேன விரைவில் இறந்துவிடுவார் என்பதை அந்த ஜோதிடர் பேசி, வீடியோவாக பதிவு செய்து, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இதுதொடர்பாக, இலங்கை ஊடகம் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சக செயலாளர் நிமல் போபகே போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, ஜோதிடர் விஜேமுனியை குற்ற புலனாய்வு போலீசார் கைது செய்தனர். மக்களை திசைதிருப்ப முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.