ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தின் முன், வடிவு கடந்த ஜனவரி 23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த சட்ட முன் வடிவு அனைத்து கட்சிகளுடன் சம்மதத்துடன் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டமானது ஆளுநர் மூலமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாநிலங்கள் சார்பிலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மாணவ சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராட்டக் களத்தில் குதித்தது. இளைஞர்களும், பெண்களும் இணைந்து நடத்தி வரும் இந்தப் போராட்டம் டெல்லி வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திகைத்துப் போன மாநில அரசும், மத்திய அரசும் ஆலோசனைகளையும் நடத்தின. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று டெல்லி விரைந்தார். அங்கு பிரதமரைச் சந்தித்தார் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை குறித்து பேசினார்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். அவரை தொடரந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.
தமிழ் நாடு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பு ஏற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை இளங்கோவன் சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
புதிய தலைவர் நியமிப்பதில் தாமதம் ஆனதால் தலைமை இல்லாமல், 4 மாதங்களாக கட்சி செயல்பட்டு வந்தது. விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என தொண்டர்கள் கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர்.
2ம் உலகபோரின் போது ஜப்பானின் நகரமான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. இரண்டு லட்சத்துக்கு மேலான மக்கள் இந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இது உலகையே உலுக்கி போட்டது. அதனையடுத்து இந்த போரில் ஜப்பான் சரணடைந்தது.
வழக்கு விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடரும் என்றும் வரும் 29-ந் தேதி ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். முதல்–மந்திரியாக ஹரிஷ் ராவத் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக முன்னாள் முதல்–மந்திரி விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.