ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

Last Updated : Jan 30, 2017, 04:06 PM IST
ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் title=

ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தின் முன், வடிவு கடந்த ஜனவரி 23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த சட்ட முன் வடிவு அனைத்து கட்சிகளுடன் சம்மதத்துடன் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 

இதனையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டமானது ஆளுநர் மூலமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடை தொடர்பான சிக்கல்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. 

Trending News