மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய கேவலத்தின் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரையும் அம்பலப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்;. இதனால் நிர்மலா டீச்சர் விவகார வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பா.ம.க வலியுறுத்தி உள்ளது.
காவிரி விவகாரத்தில் விழிப்புடன் செயல்பட்டு மத்திய அரசின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் வகையில் மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கும் அரசியல் நடவடிக்கைகளை தமிழகம் மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப் பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அவரை நீக்க வேண்டும் என பாமக சார்பில் வரும் 9-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஏப்ரல்11-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் போராட்டம் பாமக சார்பில் நடைபெற உள்ளதால், அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
காவிரி பிரச்சினையில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், அது காலத்தைக் கடத்தும் பயனற்ற உத்தி என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படாததால் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிதியில் ரூ.1950 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சிலைகளை சேதப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களும், துடிப்பவர்களும் பகுத்தறிவற்ற முட்டாள்களாகவும், அயோக்கியர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் தான் இருக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரி பாசன மாவட்டங்களில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஒக்கிப் புயலில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களைக் காப்பாற்றும் விஷயத்தில் தவறிய மத்திய, மாநில அரசுகள் கண்டித்து வரும் 16-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா மற்றும் சேவை உரிமை மசோதாக்களை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
பைனான்சியர் ஜி.என்.அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தாலேயே, நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்த நிலையில், அதேபோல மின்சாரம் தாக்கி மேலும் ஒருவர் சாவு இறந்துள்ளதால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனத்தை தமிழகரசுக்கு தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும், துயரமும் விலகும் முன்பே மேலும் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். மழை மற்றும் மழை சார்ந்த விபத்துகளிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற தமிழக அரசு தவறியது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. எனவே இது தொடர்பான விசாரணையை உடனடியாக சிபிஐ மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் குட்கா உற்பத்தி செய்யப்பட்டதை உறுதி செய்யும் வகையில் எம்.டி.எம் என்ற குட்கா நிறுவனம் ரூ.9 கோடி கலால் வரி செலுத்தியிருப்பதாக ஜி.எஸ்.டி. புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருக்கிறது. ஆனால், மறுபுறம் குட்கா ஊழல் குறித்த விசாரணையை கையூட்டு தடுப்புப் பிரிவு முடக்குவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் பி.எட். எனப்படும் இளநிலை கல்வியியல் படிப்பில் இருந்து தமிழ் மொழியை நீக்கியது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. உலக அளவில் தமிழை வளர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசு, அதேநேரத்தில் தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
வீண் செலவு மற்றும் கட் - அவுட்களால் பொது மக்கள் அவதி படுவதால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு மிக மோசமான காலக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப் போன்று தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் அவற்றைத் தீர்க்க வேண்டிய ஆட்சியாளர்கள் மக்களின் வரிப் பணத்தில் தங்களின் புகழ்பாடும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் மற்றும் பிற மர்மக் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவதிலும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதிலும் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் மற்றும் பிற மர்மக் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவதிலும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதிலும் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் தோல்வி வெளிப்படையாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பதாகை வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஆனால் தமிழக அமைச்சர்கள் அதுகுறித்த விதிகளை மீறப்பட்டிருக்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.