திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெருஞ்சாலக்குடி காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ், மலேசியாவில் வேலை பார்த்து வருகின்றார்.
இவரது மனைவி திலகவதி. இவர் சுகாதார திட்டத்தின்கீழ் ஸ்ரீரங்கத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சூர்ய பாஸ்கர் (19), ரஞ்சித் (15) என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் சூர்யபாஸ்கர் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றார். இளையவர் ரஞ்சித் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வந்தார்.
தினமும் வீட்டில் இருந்து பள்ளிச்சென்று வரும் ரஞ்சித் நேற்று மாலை அவர் தன் வீட்டில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாஎ லால்குடி காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விசாரணையில் ரஞ்சித்தின் சக மாணவர்கள் அவரை பெண்ணை போன்று இருப்பதாக கூறி அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் மனவேதனையடைந்த ரஞ்சித் இதுபற்றி அவரது தாயிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து தாய் திலகவதி பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் புகார் தெவித்துள்ளார். மேலும் ரஞ்சித்தை கிண்டல் செய்யும் மாணவர்களை கண்டித்து வைக்குமாறும் கூறியுள்ளார். ஆசிரியர்களும் கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் ரஞ்சித்தை, மாணவர்கள் சிலர் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக மிகவும் மனவேதனையடைந்த ரஞ்சித் நேற்று பள்ளியில் இருந்து வீட்டிற்கும் சென்றதும் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது ரஞ்சித் தற்கொலை செய்யும் முன்பு அவரது தாய்க்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியது தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது...
"அம்மா என்னை என்னுடன் படிக்கும் மாணவர்கள் பெண் போல் இருப்பதாக கிண்டல் செய்கிறார்கள். இதனால் நான் இந்த முடிவை எடுத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இந்த வீட்டை விட்டு நீங்கள் செல்ல வேண்டாம். எனது மரணத்திற்கு காரணம் பொன் வசந்த், பிரகாஷ், ஹரி சங்கர், தனுஷ். எனக்கு நடந்த மாதிரி வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. அம்மா என்னை மன்னிச்சுருங்க" என குறிப்பிட்டுள்ளார்.