Money Tips: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முறையான சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) சிறந்த வழியாகும். இதில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ .500 சிறிய முதலீட்டில் தொடங்கலாம்.
SIP என்றால் என்ன? அதில் எப்படி முதலீடு செய்வது? SIP அக்கவுண்ட் எப்படி தொடங்கியது? SIP நன்மைகள் என்ன? இதுக்குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த திட்டம் முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலமானது.
எதிர்கால நலனிற்காக ஒருவர் முதலீடு செய்ய நிலைத்தால், அதற்காக அவரிடம் மிக அதிக தொகை இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. சரியான முறையில் திட்டமிட்டு, நம் வருமானத்தில் ஒரு சிறிய அளவை முதலீடு செய்தால் கூட, அது சில ஆண்டுகளில் நம்மை ஒரு பெரிய தொகைக்கு அதிபதியாக்கும்.
நம்மில் பலருக்கு விரைவில் பணக்காரர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு சேமிப்பு மிக அவசியம். நம் அனைவருக்குமே முதலீடு மற்றும் சேமிப்பின் முக்கியத்துவம் தெரியும். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல மிகச் சிறிய தொகையை நீங்கள் இப்போது சேமிக்கத் தொடங்கினாலே உங்களது ஓய்வுக் காலத்தில் மிகப் பெரிய தொகையை உங்களால் ஈட்டிவிட முடியும். லட்சாதிபதி அல்லது கோடீஸ்வரர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருக்கலாம். அது மிகவும் எளிதான விஷயம் இல்லை. ஆனால் நீங்கள் தொடர்ச்சியாக இந்த விஷயங்களை செய்தால் அந்த ஆசையை நீங்கள் சுலபமாக நிறைவேற்றலாம்.
கோடீஸ்வரர் ஆவதற்கு குறுக்குவழி எதுவும் இல்லை. சில முதலீடு முறையாக செய்யப்பட்டால், அது அவ்வளவு கடினம் அல்ல. எப்படி தொடங்குவது என்பது தான் மிகப்பெரிய கேள்வி..
மியூச்சுவல் ஃபண்டுகள் அதாவது பரஸ்பர நிதியங்கள் மூலம், சிறந்த வருமானம் கிடைக்கும் என்பதை சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். இவை நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை அளிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.