சேலம் தனியார் பஸ்ஸில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இரவு 9 மணிக்கு சேலத்தில் இருந்து ஓமலூர் அருகே உள்ள நார்ணம்பாளையத்திற்கு ஒரு தனியார் பஸ் சென்றது. நேற்றிரவு 10 மணிக்கு அந்த பஸ் நார்ணம்பாளையம் சென்றடைந்தது. அப்பொழுது பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி சென்றனர்.
ஆனால், சிறுமி பஸ்சுக்குள் வைத்து மணிவண்ணன், முருகன் மற்றும் பெருமாளிடம் உட்பட 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்க கூடாது என்று பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மார்ச் 2-ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்த இருந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து சாதிக் பாட்ஷா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாணவர்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என்று உத்தரவிட்டனர்.
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்காவிட்டால் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளானர்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைத்து போராடி வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம், மானா மதுரையைச் சேர்ந்த சோனாலி(வயது19). கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சோனாலி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில், கடந்த கல்வி ஆண்டில் 3-ம் ஆண்டு படித்த வந்த உதயகுமார்(வயது21) சோனாலியை ஒரு தலையாகக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சோனாலி அவரது காதலை ஏற்கவில்லை. இதற்கிடையே, கடந்த நவம்பர் முதல் உதயகுமார் கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
அகில இந்திய அளவிலான சி.ஏ. தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் முதலிடம் பெற்றுள்ளார். இத்தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இதில் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்(வயது20) 800-க்கு 613 மார்க்குகள் அதாவது 76.63 சதவீதம் பெற்று முதலிடம் பெற்றார்.
ஆந்திர பிரதேசம் சேர்ந்த பிந்து பிரியா என்ற மாணவி தற்போது சலூன் கடை நடத்திவருகிறார்.
பிந்து பிரியாவின் அப்பா சில மாதங்களுக்கு முன்பே முடி திருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே இறந்து விட்டார். இதனால் தனது குடும்ப வறுமையை போக்கவும், இரண்டு தங்கைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துணிச்சலுடன் முடி திருத்தும் பணி செய்துவருகிறார். அந்த வீடியோவை பாருங்கள்
வீடியோ:-
கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்திருக்கிறது.
கடந்த வருடம் மொத்த 97.32 சதவீதமாக இருந்தது.
இந்த வருடம் மொத்த தேர்ச்சி சதவீதம் 96.21 ஆகும்.
மாணவியர் 96.36 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர்.
மாணவர்கள் 96.11 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதத்தில் திருவனந்தபுரம் முதலிடத்தினை பிடித்துள்ளது அதன் சதவீதம் 99.87.
99.69 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தை சென்னை பெற்றுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடந்த சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன.
www.cbseresults.nic.in, www.results.nic.in www.cbse.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி வெயில் இன்றுடன் முடிவடைகிறது.
ஆனாலும் பகலில் அனல் காற்று வீசுவதால் வெப்பம் மக்களை வாட்டியெடுத்து வருகிறது. எனவே பள்ளிகளின் கோடை விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்படுமா என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்ப்பில் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.