காஷ்மீரின் லாதோராவில் நடந்த என்கவுண்டரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவன் காலித் என்பவன் கொல்லப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
போலீஸ் அதிகாரி எஸ்.பி. வாய்த் பேசுகையில், “காஷ்மீர் மாநில சிறப்பு போலீஸ் படை, சி.ஆர்.பி.எப்., மற்றும் ராணுவம் இணைந்து கூட்டாக நடத்திய ஆப்ரேஷனில் பயங்கரவாதி காலித் கொல்லப்பட்டான், என கூறினார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி காஷ்மீரின் உரி செக்டரில் ஜெய்ஷி முகமது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ஜவான்கள் 19 பேர் வீரமரணம் அடைந்தனர்.
உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா கடந்த ஆண்டில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தி 40 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதல் பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
பயங்கரவாதிகள் புல்வாமா மாவட்டத்தின் பஸ் ஸ்டாண்டிற்கு அருகே போலீசார் குழு மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். மேலும் அவர்கள் மீது குண்டுகளை வீசினர். பின்னர் அந்த இடத்தை விட்டு வெளியேறினர் பயங்கரவாதிகள்.
இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 7 சிஆர்பிஎஃப் ஊழியர்கள் காயமடைந்தனர். மேலும் வெடிகுண்டு தாக்குதலால் பொதுமக்கள் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
சோபியான் மாகாணத்தில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்புரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, அவர்கள் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி அபு துஜனா சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி அமெரிக்கா நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீனை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இதைக்குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து வருகிறது.
பிரதமர் மோடி அமெரிக்கா நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீனை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இதைக்குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படை முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இன்று அதிகாலை சுமார் 3:30 மணிக்கு இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதிகள் 4 பேர் சம்பல் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படையின் 45 படைப்பிரிவு முகாம் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலையடுத்து, இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயற்சி செய்த தீவிரவாதிகளை பாதுகாப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் புல்வாமா மாவட்ட தலைவராக உள்ள அப்துல் ஞானி தார் இன்று பிற்பகலில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் மாவட்ட தலைவர் மற்றும் வழக்கறிஞராக பணியாற்றி வந்த அப்துல் ஞானி தாரை தீவிரவாதிகள் ஏ.கே ரக துப்பாக்கியால் வெகு அருகில் இருந்து சுட்டுக் கொன்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம், ஜாப்தி ரயில் நிலையம் அருகே போபால் உஜ்ஜைனி பயணிகள் ரெயில் சென்றபோது ரயிலின் பொதுப்பெட்டியில் நேற்று காலை பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் ரயில்பெட்டியின் கூரை வெடித்து சிதறியது.
இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீட்டு கட்டிடத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர் காவல் துறையினர். பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீட்டு கட்டிடத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர் காவல்துறையினர். பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று மாலை தீவிரவாதிகள் திடீரென காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் வீடு ஒன்றில் பதுங்கி இருந்தபடி இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்கு காவல்துறையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இருதரப்பினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிச் சண்டை நடைபெறும் நிலையில், பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்கவும் காவல்துறையினர் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
தீவிரவாதிகள் ஊடுருவலை முறியடித்த எல்லைப் பாதுகாப்பு படையினர்.
காஷ்மீரில் இந்திய எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபடுவதை எல்லைப் பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் பண்டிப்புரா மாவட்டத்தில் ஊடுருவலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் 5 பேர் காயம் அடைந்தனர். ஒரு தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை தடை செய்தவர்கள் பட்டியலில் சேர்க்க இந்தியாவின் முயற்சிக்கு சீனா தடை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பையில் சந்தேகத்திற்குரிய வகையில் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் காணப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது
மும்பை கடற்படை தளம் அருகே கருப்பு நிற உடையில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் திரிவதை பார்த்ததாக பள்ளி மாணவர்கள் கூறியுள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கக்கூடும் என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
மும்பையில் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் காணப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது
மும்பை கடற்படை தளம் அருகே கருப்பு நிற உடையில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் திரிவதை பார்த்ததாக பள்ளி மாணவர்கள் கூறியுள்ளனர், இதனையடுத்து பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உரான் கடற்படை தளம் அருகே யுஇஎஸ் பள்ளி மாணவர்கள் சந்தேகத்திற்கு மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் திரிவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அசாம் மாநிலம் கோக்ரஜார் நகரில் பயங்கரவாதிகள் மார்க்கெட்டில் நேற்று மதியம் ஒரு ஆட்டோவில் வந்த பயங்கரவாதிகள் 3 பேர் அங்கு கூடி இருந்தவர்களை நோக்கி கையெறி குண்டுகளை வீசியபடி, துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலந்த மக்கள், சிதறி ஓடினர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும், அந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் விரைந்து வந்தனர். அதற்குள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி ஆனார்கள். மேலும் 30-க்கும் அதிகமான பேர் காயம் அடைந்தனர்.
பெருமளவு பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் புகுந்து உள்ளனர் என்று உளவுத்துறை தகவல்கள் கூறியுள்ளன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஊடுருவிய 25-30 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி உள்ளோம் என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
பிரான்ஸ் உள்ள பாரீஸ் நகரில் இருந்து கெய்ரோவுக்கு புறப்பட்டு சென்ற எகிப்து விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் மொத்தம் 66 பேர் பயணம் செய்தனர். அதில் பயணம் அனைவரும் பலியாகி இருக்கக்கூடும் என்றும், யாருதாவது உயிருடன் இருக்கிறர்களா? இல்லையா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.