Latest News Udhayanidhi Stalin Wishes Ajith Kumar : தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். எதற்காக தெரியுமா?
முன்னாள் நடிகர் உதயநிதி ஸ்டாலின், தற்போது துணை முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். இதையடுத்து, கீர்த்தி சுரேஷின் ராசியால்தான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகியிருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். அது ஏன் தெரியுமா?
தெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 110-வது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இன்று தேவரின் குருபூஜை நடைபெற்றது. இன்று காலை மதுரை வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 110-வது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதலைமைச்சர், துணை முதலைமைச்சர் அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இன்று தேவரின் குருபூஜை நடைபெற்றது. இன்று காலை மதுரை வந்த முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இவர்களுடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திபிற்க்கு பிறகு செய்தியாளர்களிடம் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
அரசியல் தொடர்பாக எதுவும் நான் பிரமதரிடம் பேசவில்லை. தமிழக மின் உற்பத்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். மேலும் கூறுகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சி பணிகள் தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளளேன்.
இவ்வாறு பேட்டி அளித்தார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இன்றிரவு டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், பிரதமர் மோடியை சந்திக்க இயலவில்லை. இந்நிலையில் நாளை ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் இன்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் செல்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.