டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளது, டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது. வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் இன்று காலை எழுந்த மக்களுக்கு பெரும் பனிமூட்டம் காணப்பட்டது.
ஹரியானாவில் அதிகாலையில் நீண்ட தொலைவு செல்லும் பஸ்களின் சேவையானது ரத்து செய்யப்பட்டது. டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் மாநிலங்களில் காற்று மாசுடன் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. காற்று மாசுடன் கூடிய அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பயணிகளின் சிரமத்தை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
மத்திய ரயில்வே துறையுடன் இணைந்து கொங்கன் ரயில்வேஸ், மும்பை சி.எஸ்.டி / ததர் / லோகமான்யா திலக் / புனே மற்றும் ரத்னகிரி / சாவந்த்வாடி சாலை / கர்மாலி
இடையில் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள் பட்டியல் காண இங்கு "http://konkanrailway.com/uploads/editor_images/1496641106_Notification_No_22_CR_Ganpati_Spl_2017.pdf" கிளிக் செய்யவும்
ராஜ்தானி, சதாப்தி ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டொமினோ பீட்சா, மெக்டோனால்ட் பர்கர்ஸ் உணவுகளை கிடைக்கும்.
இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு உணவு வழங்குவதற்கு டொமினோஸ், கேஎப்சி, மெக்டோனால்ட், சாகார் ரத்தா மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து உள்ளது.
இன்று முதல் ராஜ்தானி, சதாப்தி விரைவு ரயில் பயணிகள் அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை ஆன் - லைன் மூலல் ஆர்டர் செய்துக் கொள்ளலாம். செல்போன் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் ஆர்டர் செய்துக் கொள்ளலாம்.
இதுபோன்ற நடவடிக்கையானது பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை கொடுக்கும்.
வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது
வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவால் இன்று 52 ரயில்கள் சில மணி நேரம் தாமதம் அடைந்துள்ளன. 12 ரயில்களின் பயண நேர மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவும் டெல்லி வடக்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.