புதுடெல்லி: டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது
வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரயில், விமான சேவைகளிலும் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. பனிப்பொழிவால் இன்று 24 ரயில்கள் சில மணி நேரம் தாமதம் அடைந்துள்ளன. 5 ரயில்களின் பயண நேர மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவும் டெல்லி வடக்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.
#DelhiFog 24 trains running late, 5 rescheduled and 1 cancelled due to foggy weather.
— ANI (@ANI_news) December 19, 2016
கடும் பணிமூட்டடின் காரணத்தால் டெல்லியிருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செயப்பட்டது.
அதுபோல இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் பனி சூழ்ந்ததால் 6 சர்வதேச விமானங்கள் மற்றும் 8 உள்நாட்டு விமானங்கள் இன்று டெல்லியில் புறப்பட தாமதமானது.
#DelhiFog 6 International and 8 domestic flights from/to Delhi delayed following poor visibility caused due to foggy weather. pic.twitter.com/PVE0FKQD0P
— ANI (@ANI_news) December 19, 2016
டெல்லியில் இன்று அதிகாலை 7.2 டிகிரியாக இருந்ததால் குளிர் தாங்க முடியாதபடி இருந்தது.
காஷ்மீர் மாநிலத்தில் குளிர் மிக காணப்படுகிறது. நேற்று அங்கு தட்பவெட்ப நிலை 4.9 டிகிரியாக குறைந்தது.
இந்த பருவத்தில் நேற்று தான் மிக அதிக குளிர் காஷ்மீரில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மிக அதிக குளிர் ஏற்படும் 40 நாள் காலம் வருகிற 21-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.