ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் மும்பையில் நடைபெற்ற நாணய கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது.
இதில் ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது.
வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 6% நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இது 6.25 சதவீதமாக இருந்தது.
அதேபோல ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 0.25% குறைக்கப்பட்டு 5.75% நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ரெப்போ வட்டி 6% இருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.