கேரளாவில் கொரோனா தொற்று குறையாத நிலையில் இப்போது 'நிபா' வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது.கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு 'நிபா' வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது இந்நோய்க்கு 17 பேர் பலியானார்கள்.பின்னர் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்தது.
இந்தியாவின் முதுபெரும் வேளாண் விஞ்ஞானியும் பசுமை புரட்சியின் தந்தை என அறியப்படுபவருமான எம்.எஸ். சுவாமிநாதன் மகள் சவுமியா சுவாமிநாதன்,காசநோய் ஆராய்ச்சியாளரான இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.
அண்டார்டிகா கண்டம் வரை பரவிய கொரோனா இதுவரை எங்கள் நாட்டில் பரவவில்லை என்று வடகொரியா அதிபர் கிம் நீண்டகாலமாக கூறி வருகிறார். தற்போது தடுப்பூசியும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றினா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடையும் கட்டத்தில் உள்ளது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில், ஜரரகுசு பிட் வைபர் என்ற பாம்பின் விஷம் முக்கிய பங்காற்றுவது, இதன் மூலம் தெரியவந்துள்ளதாக பிரேசில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒருபுறம் தடுப்பூசி பற்றாக்குறை நிலவினால், மறுபுறம் தடுப்பூசி மருந்து வீணாவது கவலையளிக்கிறது. இந்த கவலையை தீர்க்க தாய்லாந்து நிபுணர்கள் ரோபோ கையை உருவாக்கியுள்ளனர்
சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்துக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட் வெண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.
டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள்தான் ஜிகா வைரசையும் பரப்புகின்றன. இந்த வைரஸ் ஒரு கர்ப்பிணிப் பெண்ணிலிருந்து அவரது கருவுக்கு பரவக்கூடியது.
பாரத் பயோடெக்கின் கோவாக்சினில் புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டி சீரம் இருப்பதாக சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை புதன்கிழமை (ஜூன் 16) மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி பலருக்கு பலவித அச்சங்கள் உள்ளன. உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ, அல்லது, பெரிய பக்க விளைவு ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கம் மக்களிடையே இருந்து வருகிறது.
குழந்தைகளுக்கான இந்த தடுப்பு மருந்து, செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் விநியோகத்திற்கு தயாராக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பின் போது ஜின்ட்ஸ்பர்க் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் தடுப்பூசி மட்டும் இலவசமல்ல, அதைப் போட்டுக் கொண்டவர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள், பைக்குகள், ஏன் தங்க நாணயம் கூட கிடைக்கும். ஆச்சரியமாக இருக்கிறதா?
தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்துகொண்டிருக்கும் வேளையில், ஏற்கனவே இருந்த தடுப்பூசி தட்டுப்பாடு இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக அரசும் தெரிவித்துள்ளது.
கேரளா, ஒடிசா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையின் போக்கில் உயர்வைக் காண முடிகிறது என்று அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.