Coronavirus updates: ஒரே நாளில் இந்தியாவில் 2,67,334 பேருக்கு கொரோனா பாதிப்பு

 கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 19, 2021, 10:12 AM IST
  • ஒரே நாளில் இந்தியாவில் 2,67,334 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • 4529 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்
  • தொடர்ந்து இரண்டாவது நாளாக 3 லட்சத்திற்கும் குறைவான பாதிப்பு பதிவு
Coronavirus updates: ஒரே நாளில் இந்தியாவில் 2,67,334 பேருக்கு கொரோனா பாதிப்பு title=

புதுடெல்லி: கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ளது. 

Coronavirus updates: கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளில் 4529 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.  

Also Read | Oxygen Status in Tamil Nadu: நெதர்லாந்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தது ஆக்சிஜன்

நேற்று ( 2021, மே 18) மட்டும் நாட்டில் மொத்தம் 2,63,533  பேருக்கு கோவிட் -19 ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக 3 லட்சத்திற்கும் குறைவான பாதிப்பை இந்தியா பதிவு செய்துள்ளது.

திங்களன்று, இந்தியாவில் 2.81 லட்சம் வழக்குகள் பதிவாகின. கோவிட் நோய் பாதிப்பு குறைந்து வருவதாகத் தோன்றினாலும், தினசரி இறப்பு விகிதத்தில் குறைவு ஏற்படவில்லை. நாள்தோறும் கோவிட்டுக்கு பலியாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,329 பேர் இறந்துள்ளனர் என்பது கவலையை அதிகரிக்கும் செய்தியாக இருக்கிறது.

Also Read | Cyclone Tauktae: புயலின் சேதங்களை பார்வையிட குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News