விநாயகர் முழு முதல் கடவுளாக, இந்த உலகை படைத்து, அதில், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களை செய்ய மும்மூர்த்திகளையும் படைத்தவர் ஆவார். அவரை பற்றிய சுவாரஷ்யமான சில தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே பெண்கள் எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.