தீபாவளியினை பட்டாசுகள் இன்றி கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்கள பள்ளி மாணவர்கள் விழிப்புனர்வு பதாகைகளுடன் பேரணியில் ஈடுப்பட்டனர்!
பட்டாசுகள் வெடிப்பதினால் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்ட வருகின்றன.
West Bengal: School students in Siliguri took out a march with the message 'say no to crackers' pic.twitter.com/m0WMxXVWl9
மேற்கு வங்க மாநிலத்தில் சரக்கு லாரியை நடு ரோட்டில் மறித்து உருளைக்கிழங்குகளை லாரியிலிருந்து எடுத்துத்தின்ற யானை.
மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கு மிட்னாபூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வனத்திலிருந்து வந்த யானை ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை நிறுத்தியது.
பின்னர், அந்த லாரியில் இருந்த உருளைக்கிழங்குகளை தும்பிக்கையால் எடுத்து அந்த யானை தின்றுள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்.
வீடியோ பார்க்க:-
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கின் மலைப் பகுதிகளை ஒருங்கிணைத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் கூர்க்காலந்து தனி மாநிலம் கோரி இன்று 28_வது நாளாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
முழு அடைப்பு போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. உணவு, மருந்துப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வன்முறையை கைவிட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இறைச்சிக்காக பசு, காளை, கன்று, ஒட்டகம் விற்கக் கூடாது என்று மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
மத்திய அரசின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. மாட்டு இறைச்சி விற்பனையை தொடர தனிச்சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரளா மற்றும் புதுச்சேரி அரசு கூறி உள்ளது.
பாஜவின் மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மேற்கு வங்கம் ஒரு போதும் அஞ்சி நடுங்காது என அந்த மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு தேர்தலிலே மேற்கு வங்காளத்தில் தன்னுடைய பலத்தை காட்ட வேண்டும் என பா.ஜனதா திட்டமிட்டு பணியாற்று வருகிறது.
மேற்கு வங்காளத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா மம்தா பானர்ஜி அரசையும் கடுமையாக குற்றம் சாட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதான தொடர் ஊழல் புகார்களால் வரும் காலத்தில் மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைக்கும் என சூசகமாக தெரிவித்தார்.
மேற்கு வங்காளம் மாநிலம் - நேபாளம் எல்லைப்பகுதியில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலை சேர்ந்த மூன்று பேரை மேற்கு வங்காளம் மாநில போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒருவயது முதல் 14 வயதுக்குட்பட்ட 17 குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது.
மேற்கு வங்கம் மாநிலத்தில், ராணுவம் குவிக்கப்பட்டதாகக் கூறி மம்தா பானர்ஜி எழுப்பியுள்ள சர்ச்சையால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு இந்தியாவின் பல நகரங்களில் இன்று மாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கோல்கட்டா, கவுகாத்தி, பாட்னா உள்ளிட்ட நகரங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.
இதை அடுத்து மக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மியான்மரை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 பதிவாகி உள்ளது.
மேற்கு வங்காளத்தில் தனியார் நிறுவன வாடகை காரின் ஓட்டுனர் கற்பழித்து விடுவேன் என மிரட்டியதை அடுத்து இளம்பெண் ஒருவர் ஓடும் காரில் இருந்து வெளியே குதித்து தப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்திலுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அதில் ஆளும் திரிணாமுல் கட்சி மொத்த 294 தொகுதிகளில் 211 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று தனது ஆட்சியை தக்கவைத்துள்ளது.
2-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ள மம்தாவுக்கும், மற்ற 41 அமைச்சர்களும் மேற்கு வங்க ஆளுநர் கே.என்.திரிபாடி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கேரள சட்டப் பேரவைக்கு மே 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டன.
மே 19ம் தேதி பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 91 இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஒரு இடத்தில் பாஜகவும் மற்றொரு இடத்தில் இதர கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் ஏப்ரல் 4-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரை நடைபெற்றது. 294 இடங்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் ஆறு கட்டங்களாக நடந்தது.
இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது. இடதுசாரி கட்சிகளுடேன் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மற்றும் பாரதீய ஜனதாவும் போட்டியிட்டன.
சட்டமன்ற தேர்தல் தமிழகம் உட்பட புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்து முடிந்தது.
தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும். அசாமில் 2 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 தொகுதிகளும், தமிழகத்தில் 232 தொகுதிகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. அதேபோல தமிழகத்தில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி முன்னிலை வகிக்கிறது. புதுவையிலும் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. கேரளாவில் இடது சாரிகள் முன்னிலை வகிக்கிறது. அசாமில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது......
2016 சட்டமன்றத் தேர்தல் தமிழகம் மட்டும் மின்றி கேரளம், புதுவை, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களிலும் நடைபெற்று முடிந்துள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தல் தமிழகம் மட்டுமின்றி கேரளம், புதுசேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் நடைபெற்று முடிந்துள்ளது.
இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது. அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் ஐந்து இந்திய மாநிலங்களின் அடுத்த முதல்வர்கள் யார் என்பது இன்னும் சற்று நேரத்தி தெரிந்துவிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.