இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாகை மாவட்டத்திலுள்ள நாகூர், அக்கரைப்பேட்டை, செருதூர், காமேஸ்வரம், கோடியக்கரை உள்ளிட்ட 25கடலோர மீனவ கிராமங்களிலும் கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுகிறது.