இன்றைய காலகட்டத்தில் பெண்கள் புகைபிடித்தல் என்பது நாகரிகம் என்றும், கவலையில் இருந்து ரிலாக்ஸ் ஆக இருப்பதாக எண்ணமும் பெண்கள் மத்தில் பரவி வருகிறது. இது கவலையளிக்கூடிய சம்பவம் ஆகும். தன்னையும் அழித்துக்கொண்டு பிறரையும் அழிப்பதுதான் இன்றைய வாழ்க்கையா?
புகை பழக்கம் பெண்களிடமும் அதிவேகமாக பரவிவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புகைபிடித்தல் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வுகள் தருவது மிகவும் நல்லது.
ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும். புகை பிடிப்பதனால் புற்றுநோய்க் கூட ஏற்படும். புகை பிடிப்பதால் மூச்சி எடுக்கும், மயக்கம் வரும், இருமல் வரும். தொடர்ந்து புகைப்பதனால் உடல் எதிர்ப்புசக்தியை இழந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஏன் மரணம் கூட ஏற்படலாம்.
கார்பன் மோனாக்சைடு உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. இதனால் நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம் மேலும் உடலில் ஊனமும் ஏற்படலாம்.
சிகரெட் புகையால் ஏற்படும் பாதிப்புகள்:
> வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது.
> புகை பிடிப்பவர்களுக்கு மூளை மங்கி விடுதல்.
> புகை பிடிப்பவர்களுக்கு புற்றுநோய், வாய் கேன்சர் அதிகம் ஏற்படுகிறது.
> புகை பிடிப்பதனால் மூச்சி வங்கும், மயக்கம் வரும், இருமல் போன்ற நிலைகள் ஏற்படும்.
> புகை பிடிப்பதனால் மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
> புகை பிடிப்பதனால் நுரையீரல் பாதிப்படைகிறது.
> புகை பிடிப்பதனால் இதயச் செயலிழப்பு நிலையடைகிறது.
> உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் தீராது.
> கார்பன் மோனாக்சைடு உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுகிறது.
> புகை தன் உயிரைக் கெடுக்கும் அடுத்தவன் உயிரையும் கெடுக்கும்.
> முடிந்தவரை புகை பழக்கத்தை குறைத்து கொள்வது நல்லது.
> புகை பிடிப்பவரின் அருகில் இருந்து தள்ளி இருப்பது நன்மை தரும்.
> முக்கியமாக இளம் பெண் சமுதாயத்தை புகை பழக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டியது
> பெண்கள் புகை பழக்கத்துக்கு அடிமையாகி தன்னை அழிப்பது இன்றி குழந்தைகளையும் அழிக்கின்றனர்.
> கருவறை குழந்தைக்கு ஆபத்து புகைபிடிக்கும் பெண்கள் பிரசவத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
> அதுமட்டுமின்றி வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் வளர்ச்சி குறைந்து விடுகிறார்கள்.
> பெண்களுக்கு குறைபிரசவம் எடை குறைந்த ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களை பலியாக்கும் புகையிலை பழக்கத்தை கைவிடுவோம் என்று உலக புகையிலை ஒழிப்பு தினமான இன்று சபதம் ஏற்போம்.