அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வீட்டிற்கு அருகே நோ பிளை சோன் (No Fly Zone) என்னும் விமனம் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள் விமானம் நுழைந்ததை அடுத்து அங்கே பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, அதிபரும் அவரது மனைவியும் வீட்டில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெலாவேரில் உள்ள பிடனின் வீட்டிற்கு அருகே ஒரு சிறிய விமானம் தற்செயலாக நோ பிளை சோன் பகுதிக்குள் நுழைந்தது. இதற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி சிறிது நேரம் வெளியே பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பிடனும் அவரது மனைவியும் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர் என வெள்ளை மாளிகையும் உளவுத்துறையும் தெரிவித்துள்ளன. பிடனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. நிலைமையை மதிப்பிட்ட பின், பிடென் மற்றும் அவரது மனைவி ஜில் இருவரும் ரெஹோபோத் பீச் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் படிக்க | வட கொரியாவில் ஒரே நாளில் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு காய்ச்சல்
விமானத்தின் பைலட்டிடம் விசாரணை நடத்தப்படும் எனவும், விமானம் பறக்கக்கூடாத பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டதாக உளவுத்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. விசாரணையின்படி, சரியான ரேடியோ சேனலில் இல்லாத மற்றும் விமான போக்குவரத்து வழிகாட்டுதலைப் பின்பற்றாத விமானியை விசாரணை செய்யப்படும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் இந்த வார தொடக்கத்தில் கடற்கரை நகரத்திற்கு பிடென் பயணம் செய்வதற்கு முன்னதாக, அப்பகுதி, பறக்க தடை மண்டலமாக அறிவித்தது. இதில் 30 மைல் தடைசெய்யப்பட்ட பகுதியில் 10-மைல் சுற்றளவில் விமான பறக்கக் தடை விதிக்கப்ட்டும் . அனைத்து விமானங்களும் நோ பிளை சோன் விதியைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.
மேலும் படிக்க | SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!