UAE, சிங்கபூரைத் தொடர்ந்து பிரான்ஸிலும் UPI... பிரதமர் மோடி அறிவிப்பு!

பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, யுபிஐ முறை பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 14, 2023, 10:45 AM IST
  • யுபிஐ சேவை இந்தியாவில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மிக பிரபலமாக பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை.
  • பல வங்கிக் கணக்குகளை ஒரே மொபைல் செயலியில் இருந்து அணுக முடியும்.
  • ஐக்கிய அமீரகம், பூடான், நேபாளம் நாடுகளும் யுபிஐ முறையை ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டது.
UAE, சிங்கபூரைத் தொடர்ந்து பிரான்ஸிலும் UPI... பிரதமர் மோடி அறிவிப்பு! title=

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இப்போது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், இந்தியாவில் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும் UPI தொழில்நுட்பத்தை பிரான்ஸ் நாட்டிலும் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். அங்கே பேசிய பிரதமர் மோடி, "பல மணி நேரம் பயணித்து என்னைக் காண வந்திருக்கும் இந்தியர்களுக்கு நன்றி.  நாம் எங்குச் சென்றாலும் அங்கே மினி இந்தியாவை உருவாக்குவோம். உங்களால் தான் இந்தியா- பிரான்ஸ் உறவு வலுப்பெறுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது, சர்வதேச வினியோக ஆகியவற்றில் இந்தியாவின் அனுபவம் உலகிற்கு உதவியாக உள்ளது. அதோடு, இந்தியாவும் பிரான்சும் நீண்ட காலமாகத் தொல்பொருள் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. சண்டிகரில் இருந்து லடாக் வரை பல இடங்களை ஆய்வுகளை இரு நாடுகளும் இணைந்து நடத்தியுள்ளது என்றார். முன்னதாக, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு பிரான்ஸின் மிக உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர் என்பதை வழங்கி கௌரவித்தார் அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன்.

பிரான்ஸ் தேசிய அணிவகுப்பில் பஞ்சாப் படைப்பிரிவு

இந்த அறிவிப்பு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைக்கான குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு என்பது இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் மற்றொரு துறையாகும்" என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி தனது உரையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவ வீரர்கள் பிரான்ஸ் நாட்டின் பெருமையை காக்கும் வகையில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்ததையும்  நினைவு கூர்ந்தார். ''நூறு ஆண்டுகளுக்கு முன், பிரான்ஸ் நாட்டின் பெருமையை காக்கும் இந்திய வீரர்கள், பிரான்ஸ் மண்ணில், தங்கள் பணியை ஆற்றி, உயிரை மாய்த்துக் கொண்டனர். இங்கு நடந்த போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான, பஞ்சாப் படைப்பிரிவு, நாளை தேசிய அளவிலான அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது'' என்றார்.

பிரான்ஸ் மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

பிரான்ஸ் நாட்டின் தேசிய தின அணிவகுப்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். "இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான இணை பிரியாத நட்பின்" பிரதிபலிப்பு இது என்று அவர் கூறினார். "பிரான்ஸ் மக்களை நான் வாழ்த்துகிறேன். என்னை வரவேற்ற பிரான்ஸ் மக்களுக்கு நன்றி. இன்று பிரான்ஸ் பிரதமர் என்னை விமான நிலையத்தில் வரவேற்றார். நாளை தேசிய தின அணிவகுப்பில் எனது நண்பர் இம்மானுவேல் மக்ரோனுடன் கலந்துகொள்கிறேன். இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத நட்பின் பிரதிபலிப்பாகும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆய்வு 

இந்தியாவின் முயற்சிகள் நாட்டிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நன்மை பயக்கும் என்பதை வெளிப்படுத்திய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆய்வு குறித்தும் பிரதமர் மோடி பேசினார். "இந்தியாவில் தீவிர வறுமை தற்போது முடிவுக்கு வரும் என்று IMF ஆய்வு கூறுகிறது. இந்தியா இவ்வளவு பெரிய பணிகளைச் செய்யும்போது, அது நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் நன்மை பயக்கும்" என்று மோடி கூறினார்.

மேலும் படிக்க | முதல்வர் வீட்டு அருகேயே வெள்ளப்பெருக்கு... அபாய அளவை தாண்டிய யமுனை நீர்மட்டம்

இந்தியாவில் யுபிஐ சேவை

யுபிஐ சேவை என்பது இந்தியாவில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மிக பிரபலமாக பயன்படுத்தப்படும் டிஜிட்டர் பண பரிவர்த்தனை முறை. இதன் மூலம் பல வங்கிக் கணக்குகளை ஒரே மொபைல் செயலியில் இருந்து அணுக முடியும். நீங்கள் வேறு வேறு வங்கியில் வங்கிக் கணக்கை வைத்திருந்தாலும் ஒரே ஒரு செயலி இருந்தால் போதும். மிக எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பணம் அனுப்ப முடியும் என்பதால் பலரும் இதைத்தான் ஆர்வமாகப் பயன்படுத்துகின்றனர். மேலும், பயன்படுத்தக் கூடுதலாக எந்தவொரு கட்டணமும் இல்லை என்பதால் பலரும் யுபிஐ முறையை ஆர்வமாகப் பயன்படுத்தி வருகின்றனர். 

உலக நாடுகளில் யுபிஐ

இந்த ஆண்டு, யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநவ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் இரு நாட்டு மக்களும் பணத்தை எளிதாக அனுப்பிக் கொள்ளலாம். அதேபோல ஐக்கிய அமீரகம், பூடான், நேபாளம் நாடுகளும் யுபிஐ முறையை ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டது. இது மட்டுமின்றி யுபிஐ அமெரிக்காவில் அறிமுகப்படுத்துவது குறித்தும் இப்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில், என்சிபிஐ பிரான்ஸ் நாட்டின் வேகமான மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் பேமென்ட் முறையான லைரா (Lyra) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News