மாலத்தீவு சீன உறவு: இந்தியாவிடம் இருந்து விலகிச் செல்ல முற்படும் மாலத்தீவு, சீனாவுடனான நட்புறவை அதிகரித்து வருவது சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது. மாலத்தீவுக்கு இந்த புதிய உறவு ஆபத்தானதாகவே இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சீனாவின் எல்லை விரிவாக்கக் கொள்கையுடன், மாலத்தீவையும் கடன் வலையில் சிக்க வைத்து, இந்தியப் பெருங்கடலின் மீதான தனது கட்டுப்பாட்டை அதிகரிக்க விரும்புகிறது. இதன் மூலம் கடல் மூலம் செய்யும் வர்த்தகத்தால் நீலப் பொருளாதாரத்தை கைப்பற்ற விரும்புகிறது சீனா.
மாலத்தீவு சீன உறவு
மாலத்தீவு சீன உறவு: லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு சர்ச்சை என்பதை ஒரு சாக்குபோக்கு என்றே சொல்லலாம். மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு தேர்தலில் போட்டியிடும்போதே ‘இந்தியா அவுட்’ (India Out) என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதுவே, அவரது இந்திய விரோதப் போக்கை அம்பலப்படுத்தியது. சீனாவுக்கு நெருக்கமான மொய்ஜு இந்தியாவுக்கு எதிராக விரோதத்தை வளர்க்கிறார்.
5.21 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாலத்தீவு நாடு, இந்தியாவை எதிர்ப்பது என்பது அவ்வளவு எளிதானதா? ஒரு நாட்டின் அதிபருக்கு வலுவான அண்டை நாட்டுடன் பகைமை பாராட்டுவதன் சாதக பாதகங்கள் தெரியாதா என கேள்வி எழுப்பினால், அவரது போக்கு விநோதமானதாகத் தோன்றும்.
உண்மையில் அவர் அப்படி பேசுவது அறியாமையில் அல்ல, அதற்கு பின்னணியில் சீனா உள்ளது. இந்தியாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் மொய்ஜு, சீனாவுக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான அவரது நெருக்கம் தெளிவாகத் தெரிந்தது. சீனாவில் இருந்து அவருக்கு கிடைத்த அன்பு சுயநலமானது எனபதும், சீனா தனது சொந்த நலன் இல்லாமல் எதையும் செய்யாது என்பதன் அடிப்படையில், மாலத்தீவு அதிபருடன் நட்பு பாராட்டும் சீனாவுக்கு அதன் சொந்த நலன்களே பிரதானமாக உள்ளது.
மேலும் படிக்க | Boycott: தீவிரமாகும் மாலத்தீவு சர்ச்சை! வைரலாகும் Chalo Lakshadweep ஹேஷ்டேக் வைரல்
சீனாவின் கடன் பொறிக்குள் மாலத்தீவு
இந்தியப் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க விரும்பும் சீனா, மாலத்தீவுகளை கைப்பாவையாகப் பயன்படுத்துகிறது. மாலத்தீவை தனது கடன் வலையில் சிக்க வைக்கும் சீனா, அந்நாட்டிற்கு கொடுக்கும் கடன் அதிகரித்துள்ளது. கடனைத் திருப்பி செலுத்த வேண்டிய நெருக்கடியை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக் காட்டியிருக்கிறது.
சீனாவின் தந்திரம்
கடன் பொறி இராஜதந்திரத்திற்கு பெயர் பெற்ற சீனா, முதலில் கடன் கொடுத்து நாடுகளை தனக்கு வலைப் பொறியில் சிக்க வைக்கும். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், அந்த நாட்டின் மீது தனது விருப்பத்தைத் திணிப்பது சீனாவின் நீண்டநாள் கொள்கையாகவே உள்ளது.
அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாலத்தீவின் மொத்த கடன்களில் 60 சதவீதம் சீனாவிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாலத்தீவு, சீனாவிடம் இருந்து 1.37 பில்லியன் டாலர் அளவிலான கடன் பெற்றிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. சீன அரசாங்கத்தின் கடன் ஒருபுறம் என்றால், மாலத்தீவில் சீன நிறுவனங்களின் முதலீடு 1.37 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. மாலத்தீவில் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தியில் சீனா மிக அதிக அளவிலான முதலீட்டைக் செய்துள்ளது.
நீலப் பொருளாதாரத்தை குறிவைக்கும் சீனா
கடன் மட்டுமல்ல, மாலத்தீவை நீலப் பொருளாதாரத்தின் வலையில் சிக்க வைத்துள்ளது சீனா. மாலத்தீவை இந்தியாவிலிருந்து விலக்கி, தன்னுடன் நெருக்கமாகக் கொண்டுவர, நீலப் பொருளாதாரம் என்ற கனவை சீனா காட்டியது. நீலப் பொருளாதாரம் மூலம் மாலத்தீவை சீனா கவர்ந்து வருகிறது. நீலப் பொருளாதாரம் என்பது கடலில் அல்லது அதைச் சுற்றி நடக்கும் பொருளாதார வணிக நடவடிக்கைகள் ஆகும்.
மீன்வளம், எண்ணெய், கனிம உற்பத்தி, கப்பல் மற்றும் கடல் வர்த்தகம், சுற்றுலாத் தொழில் ஆகியவற்றை மேம்படுத்துதல் ஆகியவை நீலப் பொருளாதாரத்தில் அடங்கும். சீனா, மாலத்தீவுகளை நீலப் பொருளாதாரத்தின் வலையில் சிக்க வைப்பதன் மூலம் இந்தியப் பெருங்கடலின் மீதான தனது கட்டுப்பாட்டை அதிகரிக்க விரும்புகிறது.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: இந்த நாளில் வருகிறது டிஏ ஹைக் அறிவிப்பு
இயற்கை வளங்கள் நிறைந்த இந்தியப் பெருங்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்க விரும்புகிறது. மாலத்தீவுகள் மூலம், மீன்வளம், கடல் அலை ஆற்றல், கடல் எண்ணெய் சுரங்கம், கனிம உற்பத்தி மற்றும் கடல் சுற்றுலா ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சீனாவின் சுயநல நடவடிக்கையை மாலத்தீவு அரசால் புரிந்து கொள்ள முடியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இப்போதும் மாலத்தீவு சுதாரிக்காவிட்டால், இலங்கைக்கு ஏற்பட்ட நிலைமை மாலைதீவுக்கும் ஏற்படலாம்.
சீனாவின் தலையீடு
சிறிய நாடான மாலத்தீவு சீனாவின் சதிகளுக்கு பலியாகி வருகிறது. பொருளாதாரத்தில் சீனாவின் தலையீடு அதிகரித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில் மாலத்தீவுக்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் சுமார் $451.29 மில்லியன் ஆகும், இதில் மாலத்தீவு $60,000 ஏற்றுமதி செய்தது, அதே சமயம் சீனாவின் ஏற்றுமதி $451.29 மில்லியன் ஆகும். மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பு வலையமைப்புகளை உருவாக்குவதற்கான பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் கீழ், மாலேயில் உள்ள வேலனா சர்வதேச விமான நிலையத்தை சீனா விரிவுபடுத்தியுள்ளது.
சீனா - மாலத்தீவு நட்புறவுப் பாலமும் கட்டப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய இயந்திர தொழில் கழகம் மாலத்தீவின் சுற்றுலாத் துறையில் 140 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு மாலத்தீவின் மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்காகும். சீனா மாலத்தீவை நாலாபுறமும் சுற்றி வளைத்து சிக்க வைக்கிறது.
மொய்ஜு
சீனா மீதான காதலால் மொய்ஜுவால் சதியைப் புரிந்து கொள்ள முடியாமல் தவறான முடிவெடுக்கிரார். பொய்யான கனவுகளைக் காட்டி, மாலத்தீவு மூலம் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் மீது சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்க விரும்புகிறது. மாலத்தீவு இந்தியப் பெருங்கடலின் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது.
சீனாவின் கடல் ஆதிக்க ஆசை
சீனா தனது 80 சதவீத எண்ணெய் வர்த்தகத்தை இந்த வழியாகத்தான் மேற்கொள்கிறது. இலங்கை, பாகிஸ்தான் போன்று மாலத்தீவையும் கடன் வலையில் சிக்க வைத்து நாசமாக்கும் சீனாவின் சதிக்கு மாலத்தீவு அதிபர் மொய்ஜுவும் இலக்காகிவிட்டார். ஆனால், இன்னும் நிலைமை மோசமாகவில்லை, இப்போதுகூட சுதாரித்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க - INDIA கூட்டணியால் சிதறும் காங்கிரஸ்... தொகுதி பங்கீட்டால் பலத்த அடி... தீர்வு என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ