Monkeypox: அதிகரிக்கும் குரங்குக் காய்ச்சல்: அவசரக் கூட்டத்தைக் கூட்டும் WHO

உலக சுகாதார அமைப்பின்  தொற்றுநோய் மற்றும் தொற்றுநோய்க்கான தொற்று அபாயங்கள் குறித்த மூலோபாய மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு குரங்குக் காய்ச்சல் தொடர்பான அவசர கூட்டத்தைக் கூட்டுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 21, 2022, 09:28 AM IST
  • ஐரோப்பாவில் அதிகரிக்கும் குரங்குக்காய்ச்சல்
  • அவசரக் கூட்டம் கூட்டும் WHO
  • தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அவசர ஆலோசனை
Monkeypox: அதிகரிக்கும் குரங்குக் காய்ச்சல்: அவசரக் கூட்டத்தைக் கூட்டும் WHO title=

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளது

சர்வதேச அளவில் ஐரோப்பாவில், குரங்குக் காய்ச்சல் துரிதகதியில் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற ஒன்பது நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குரங்குக் காய்ச்சல் வழக்குக்கள் பதிவாகியுள்ளன. முதலில் குரங்குகளிடம் கண்டறியப்பட்ட இந்த நோய் நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது. இதையடுத்து இந்த அவசரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவான நிலையில்,  உலக சுகாதார நிறுவனம் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில், சமீபத்தில் ஏற்பட்டு, விரைவாக பரவி வரும் குரங்கு நோய் குறித்து விவாதிக்கப்படும்.

மேலும் படிக்க | டெங்கு வைரஸின் குடும்பத்தை சேர்ந்த குரங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ்

இந்த நோய் ஒரு வைரஸ் தொற்று ஆகும், இது மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் பொதுவாக ஏற்படும் நோய். ஐரோப்பாவில் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்குக் காய்ச்சல் இருப்பதாக கருதப்பட்டாலும், அவை அனைவருக்கும் உறுதிபடுத்தப்படவில்லை.  

ஐரோப்பாவில், ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் என ஒன்பது நாடுகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் வந்துள்ளன.  

health

உலக சுகாதார அமைப்பின் (WHO) தொற்றுநோய் மற்றும் தொற்றுநோய்க்கான (STAG-IH) தொற்று அபாயங்கள் குறித்த மூலோபாய மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இந்த சிக்கலை விவாதிக்கும்.

இதற்கிடையில், இந்தியாவின் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஐசிஎம்ஆர் (IMCR) இடம் இந்த சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்கும்படி கூறியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

மேலும் படிக்க | கொழுப்பை குறைத்து உடல் எடையை பராமரிக்க சியா விதைகள்

விமான நிலையம் மற்றும் துறைமுக சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

"குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணித்தவர்களின் மருத்தவ தகவல்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட பயணிகள் யாராக இருந்தாலும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்களிடம் இருந்து எடுக்கும் பரிசோதனை மாதிரிகளை, புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தின் பிஎஸ்எல் 4க்கு அனுப்பி பரிசோதனைகளை செய்யவேண்டும்" என்று அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.

குரங்கு காய்ச்சல் என்பது,  குரங்கு அம்மையை ஏற்படுத்தும் வைரஸ்களின் குடும்பத்தில் இருந்து வருகிறது. குரங்குக்காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் தாக்கத்திற்குப் பிறகு தடுப்பூசி போடுவதும் சாத்தியமாகும், ஆனால் அது நோய் வெளிப்பட்ட நாளிலிருந்து 4 நாட்களுக்குள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | இங்கிலாந்தில் ஒருவருக்கு தொற்று உறுதி: அறிகுறிகள் இவைதான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News