Netflix நிறுவனத்தை எச்சரிக்கும் வளைகுடா நாடுகள்... காரணம் என்ன!

OTT தளமான நெட்ஃபிக்ஸ் (Netflix) வளைகுடா நாடுகளில் எழுந்துள்ள்ள சர்ச்சை காரணமாக சிக்கலில் சிக்கியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 8, 2022, 07:24 AM IST
  • வளைகுடா நாடுகளின் ஊடக உள்ளடக்க ஒழுங்குமுறை விதிகளை மீறும் Netflix.
  • எதிர்ப்பு தெரிவித்த வளைகுடா நாடுகளின் குழு.
  • குழந்தைகளுக்காக ஒளிபரப்பப்படும் சில உள்ளடக்கங்களை Netflix நீக்க வேண்டும் என கோரிக்கை.
Netflix நிறுவனத்தை எச்சரிக்கும் வளைகுடா நாடுகள்... காரணம் என்ன! title=

OTT தளமான நெட்ஃபிக்ஸ் (Netflix) தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. நெட்ஃபிளிக்ல் தளத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் கவுன்சிலில் உள்ள அனைத்து நாடுகளின் உறுப்பினர்களும் கூட்டறிக்கையில், இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய சமூக விழுமியங்களுக்கு எதிரான உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதை நெட்ஃபிக்ஸ் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் இதனை செய்யவில்லை என்றால், அதற்கு எதிராக கவுன்சில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

எதிர்ப்பு தெரிவித்த வளைகுடா நாடுகளின் குழு

வளைகுடா நாடுகளின் இந்த கவுன்சிலில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய 6 மத்திய கிழக்கு நாடுகள் அடங்கும். வளைகுடா நாடுகளின் ஊடக உள்ளடக்க ஒழுங்குமுறை விதிகளை மீறும் வகையில் Netflix தளத்தில் உள்ள சில உள்ளடக்கங்கள் உள்ளதாக கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், GCC கவுன்சில் ஒரு கூட்டு அறிக்கையில், குழந்தைகளுக்காக ஒளிபரப்பப்படும் சில உள்ளடக்கங்களை Netflix நீக்க வேண்டும் என்று கூறியது.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!

வளைகுடா நாடுகள் எதிர்க்கும் சில உள்ளடக்கங்கள்

வளைகுடா நாடுகளின், இந்த ஆட்சேபனைக்கு நெட்ஃபிக்ஸ் எந்த எதிர்வினையும் தெரிவிக்கவில்லை. ஓரினச்சேர்க்கை தொடர்பாக நெட்ஃபிக்ஸ் தளத்தில் உள்ள சில உள்ளடக்கங்கள் குறித்து வளைகுடா நாடுகளின் கவுன்சிலின் அறிக்கை வெளியிட்டுள்ளதாக நம்பப்படுகிறது. முன்னதாக, பல மத்திய கிழக்கு நாடுகள், ஓரின சேர்க்கை அல்லது லெஸ்பியன் முத்தக் காட்சிகள் காட்டப்படும் திரைப்படங்கள் அல்லது வலைத் தொடர்களில் இருந்து இது போன்ற காட்சிகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டன. ஜூன் மாதத்தில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிஸ்னி மூவீஸின் 'லைட் இயர்' திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட தடை விதித்தது. இதற்குப் பின்னால் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் ஓரினச்சேர்க்கை உறவு, இந்த நாடுகளின் ஊடக ஒழுங்குமுறை தரங்களுக்கு எதிராக இருந்தது என கூறப்பட்டது.

வளைகுடா நாடுகளின் விதிகள்

ஈரான் உட்பட பெரும்பாலான வளைகுடா நாடுகளில் ஓரினச்சேர்க்கை ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. திங்களன்று, ஈரான் இரண்டு LGBTQ ஆர்வலர்களுக்கு மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Quaternary Twins: அமெரிக்காவின் ‘மரபணு’ சகோதரர்கள்; வியக்கும் விஞ்ஞானிகள்!

மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News