லாகூர்: பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோர் கார் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இது பாகிஸ்தான் நாட்டின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த இச்சிறிய மாகாணத்தின் தென்மேற்கில் பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும் பழங்குடிகள் பகுதிகள் உள்ளது. இதன் தலைநகரம் பெசாவர் நகரம் ஆகும்.
அங்கு சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.இந்த மழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனமழையால், 5 வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. கராச்சி உள்பட சிந்த் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மித அளவில் இருந்து கனமழை பெய்ய கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதேபோன்று, பாகிஸ்தானின் தர்பார்க்கர், படின், தட்டா, உமர்கோட், சங்கார், மீர்புர்க்காஸ், ஷாகீத் பெனாசிராபாத், ஜாம்சோரோ, கைர்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனிடையே, பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தோர்ஹர் கிராமத்தில் கடுமையான மின்னல் தாக்கியதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 14 பேர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR