ஐக்கிய நாடுகளின் கலிபோர்னியாவில், இந்திய குடும்பம் ஒன்று காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வியாழன் இன்று போர்ட்லான்டில் இருந்து சான் ஜோஸ்-க்கு காரில் சென்ற இந்த குடும்பம்பத்தினர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கேரளாவை சேர்ந்த தொட்டப்பள்ளி குடும்பத்தார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
காலிப்போனியா சாலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளதாவது.... கடந்த வியாழன் அன்று டோரா க்ரீக் பகுதிக்கு அருகில் இரவு சுமார் 1.10 மணியளவில் காணாமல் போன இவர்களை தேடும்பணி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தார் பயணித்த ஹோன்டா பைலட் வாகனம் போன்ற வாகம் ஒன்று கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த வாகனமும் அவர்கள் பயணித்த வாகனத்தின் அடையாளங்களை ஒத்துருக்கின்றன. தொடர்ந்து தேடுதல் பணி நடைப்பெற்ற வருகிறது என தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களின் பெயர்கள் சந்தீப்(42), அவரது மனைவி சௌமியா(38), மகன் சித்தார்த்(12), மற்றும் மகள் சாக்சி(9) என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அவர்களது உடல் கிடைக்காத நிலையில் அவர்களின் நிலை என்னவானது என்பது குறித்து கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள்., இச்சம்பவம் குறித்து இந்தியா தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
I have asked for a report from our Consul General in San Francisco. @CGISFO https://t.co/tsGkUyJJlq
— Sushma Swaraj (@SushmaSwaraj) April 10, 2018