லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் டோபா டெக் சிங் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை குரி அடிஃயுர் ரஹ்மான் என்ற இஸ்லாமிய மதகுரு ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
12 வயது சிறுமி மதப்பள்ளியில் பாடம் கற்பதற்காக சென்றபோது தான் இந்த கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்த மதப்பள்ளியில் இருந்த மதகுரு ரஹ்மான் தனது உதவியாளர் பில்கியுஷ் பிபி உதவியுடன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு துடிதுடித்த அந்த சிறுமியை காம கொடூரன் மதகுரு ரஹ்மான் பாலைவனப்பகுதியில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பாலைவனப்பகுதியில் சிறுமி அழுதுகொண்டிருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி தான் மதகுரு ரஹ்மானால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதகுரு ரஹ்மான் மற்றும் இந்த குற்றம் செய்ய உதவி செய்த பில்கியுஷ் பிபி ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதனை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மதகுரு ரஹ்மான் மற்றும் அவருக்கு உதவிய பில்கியுஷ் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதில், 12 வயது சிறுமியை மதகுரு ரஹ்மான் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.
இதனை தொடர்ந்து 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதகுரு குரி அடிஃயுர் ரஹ்மானுக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், பாகிஸ்தான் ரூபாயில் 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது. அதேபோல், சிறுமியை மதகுரு பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய பில்கியுஷ் பிபி-க்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட இந்த காம கொடூரர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ALSO READ Body Shaming: பள்ளி மாணவியின் விநோதமான சீருடை போராட்டம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR