கடந்த 5-ம் தேதி வடகொரியா அதன் கிழக்குக் கரையோரம் உள்ள தளத்திலிருந்து நான்கு ஏவுகணை ஏவி சோதனை செய்துள்ளது.
இதன் அருகில் தான் ஜப்பான் கடல் பகுதியில் உள்ளது. இதனால் வட கொரியா ஏவுகணை சோதனையை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கண்டித்துள்ளார். பாய்ச்சப்பட்ட நான்கு ஏவுகணைகளில் மூன்று ஜப்பானின் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தில் விழுந்துள்ளன. வட கொரியா தனது எதிரியாக கருதும் தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்திவருகிறது.
இந்நிலையில், ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கும் நோக்கத்தில் அதற்கான ஒத்திகையாக ஏவுகணை பரிசோதனை நடத்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வடகொரியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
அதிபர் கிம் ஜாங் உன்-னின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நமது ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக அமைந்திருந்தது. இதையடுத்து, ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கும் அடுத்தகட்ட பணிகளை தொடருமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.