ஸ்வீடனில் இரவில் ஊதா நிறமாகும் வானம்.. காரணம் என்ன..!!

சுவீடனின் (Sweden)  ட்ரெலிபோர்க்கில் உள்ள ஒரு தக்காளி பண்ணையில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் வகையிலான லைட்டிங் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 28, 2020, 02:50 PM IST
  • சுவீடனின் (Sweden) ட்ரெலிபோர்க்கில் உள்ள ஒரு தக்காளி பண்ணையில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் வகையிலான லைட்டிங் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
  • ஆரம்பத்தில், ஊதா நிற வானத்தைப் பார்த்து மக்கள் அஞ்சி புகார் அளித்தனர்.

    மக்களின்பெரும் எதிர்ப்பை அடுத்து, தற்போது, சில மணிநேரங்கள் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
ஸ்வீடனில் இரவில் ஊதா நிறமாகும் வானம்.. காரணம் என்ன..!! title=

ஸ்டாக்ஹோம்: பொதுவாக இரவில் இருட்டினால் எல்லாம் கருப்பாகத் தான் தெரியும். ஆனால், ஸ்வீடனின் இந்த பகுதியில் வானம் திடீரென்று ஊதா நிறமாக மாறியது. ஏன் இப்படி நடக்கிறது என்பதை மக்களுக்கு நீண்ட நேரம் புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், இதன் பின்னணியில் உள்ள காரணத்தை இப்போது மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர்

ஸ்வீடனின் (Sweden) தெற்கு கடற்கரையில் உள்ள ட்ரெலிபோர்க்கில் இரவில், வானம் கருப்பு நிறத்தில் இருந்து ஊதா நிறமாக மாறியது. ஆரம்பத்தில், இந்த சம்பவம் குறித்து மக்கள் மிகவும் பயந்தனர். பின்னர் அவர் காரணத்தை அறிந்ததும், ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டனர். உண்மையில், அருகிலுள்ள தக்காளி பண்ணையில் மின்சாரத்தை சேமிக்கும் வகையிலான ஆற்றல் மிக்க லைட்டிங் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது, அங்கு ஊதா ஒளியை உமிழ்கிறது. இதனால், வானத்தின் நிறமும் மாறுகிறது.

ALSO READ | ட்ரம்ப் விதிக்கும் புதிய நிபந்தனை... ஜோ பைடனுக்கு சிக்கல் நீடிக்கிறதா.. !!!

கிஸ்லோவில் உள்ள தக்காளி பண்ணையில்  மின்சார எல்.ஈ.டி ஒளி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது, ட்ரெலிபோர்க்கிலிருந்து 10 நிமிடங்கள் தூரத்தில் உள்ள இந்த இடத்தில், இது உள்ளது. மரங்களில் விழும் ஒளி அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக, அதிக ஒளி கொண்ட இந்த எல்.ஈ.டி (LED) விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும், அவரது இந்த முயற்சி மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் என்பதை பண்ணை உரிமையாளர் அறியவில்லை

ஒளி மிகவும் பிரகாசமாக இருப்பதால், அது இருள் வந்தவுடன் வானம் ஊதா நிறமாகிறது. இது தொடர்பாக மக்களும் புகார் அளித்துள்ளனர், இதைக் கருத்தில் கொண்டு காலை 5 முதல் 11 மணி வரை விளக்கு ஒளி அணைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் சில மணிநேரங்களுக்கு விளக்குகள் அணைக்கப்படுவதாக ட்ரெலிபோர்க் சுற்றுச்சூழல் மேலாளர் மைக்கேல் நோரன் கூறுகிறார், ஆனால் விரைவில், யாருக்கும் தொந்தரவு கொடுக்காத வகையில், விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் வகையில் மற்றொரு திட்டம் தயாரிக்கப்படும். அதே நேரத்தில், தக்காளி பண்ணையின் உரிமையாளர் ஆல்பிரட் பெடர்சன் & சன் கூறுகையில், மின்சாரத்தை சேமிப்பதற்காகத் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றும் கூறினார்.

ALSO READ | ஒரு பரிசின் மூலம் தனது ஊழியர்களை கோடீஸ்வரர்களாக்கிய சூப்பர் BOSS... !!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News