ஆஸ்திரேலியா வணிக வளாகத்தில் மோதிய விமானம் -5 பேர் பலி

Last Updated : Feb 21, 2017, 12:16 PM IST
ஆஸ்திரேலியா வணிக வளாகத்தில் மோதிய விமானம் -5 பேர் பலி title=

ஆஸ்திரேலியா மெல்போர்னியாவில் விமானம் வணிக வளாகத்தில் மோதி வெடித்து சிதறியதில் 5 பேர் பலியானார்.

மெல்போர்னில் உள்ள எசண்டன் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய இரண்டு இன்ஜின்கள் கொண்ட பீச்கிராப்ட் சூப்பர் கிங் என்ற சிறிய விமானம் கிளம்பியவுடன், விமான நிலையம் அருகில் உள்ள வணிக வளாகம் மீது மோதி வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 5 பேர் பலியானார்கள். மீட்புப்படையினர் விரைந்து மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.

வணிக வளாகத்தில் இருந்த சிலர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்ஜின் கோளாறு காரணமாக விமானம் விபத்திற்குள்ளானதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் மோதியதி்ல் வணிக வளாகம் தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதைக்குறித்து ஆஸ்திரேலியா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News