புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) செப்டம்பர் இறுதியில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த சுற்றுப்பயணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இந்த சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. முன்னதாக திட்டமிட்ட படி, பிரதமர் மோடி செப்டம்பர் 23-24 தேதிகளில் அமெரிக்காவிற்கு செல்லக் கூடும் என்று நம்பப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சந்திப்பு
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபராக ஜோ பிடன் (Joe Biden) பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியின் முதல் அமெரிக்க பயணம் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, பிரதமர் மோடியின் பயண திட்டம் இறுதி செய்யப்பட்டு வருகிறது. எல்லாம் திட்டமிட்டப்படி, செப்டம்பர் 22 முதல் 27 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கும் இடையிலான முதல் நேரடி சந்திப்பு இதுவாக இருக்கும்.
ALSO READ: ஆப்கானிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர்; அடுத்தது என்ன?
ஆப்கான் நெருக்கடி நிலை
ஆப்கானிஸ்தானில் வேகமாக மாறிவரும் சூழ்நிலையில், பிரதமர் மோடியின் இந்த வருகை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திப்பதைத் தவிர, அமெரிக்க நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளுடனும் பிரதமர் முக்கியமான சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பயணத்தில் சீனாவின் பிரச்சனை குறித்தும் பிரதமர் மோடி என்று கூறப்படுகிறது.
அமெரிக்க பயணத்தின் போது, இரு தரப்புக்கும் இடையே சீனா குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம். அதே நேரத்தில், இரு நாடுகளும் இந்தோ-பசிபிக் பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குவாட் தலைவர்களின் உச்சி மாநாடு வாஷிங்டனிலும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையும் அதே சமயத்தில் நடக்கிறது என்று நம்பப்படுகிறது. எனினும், பிரதமர் மோடியின் பயணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR