தென்கிழக்கு பிரேசில் பகுதியில் அரிய வகை இணைந்த வெளவால்கள் சடலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். மூன்றாவது முறையாக இதுபோல் கிடைத்து உள்ளதாக கூறுகின்றனர். இந்த அரிய வகை இணைந்த வெளவால்கள் இன்னும் எஞ்சியுள்ளதா என்பதை பற்றி ஆய்வு செய்து வருவதகவும் தெரிவித்துள்ளனர்.
டெய்லி மெயில் அறிக்கைகள் படி, வெளவால்கள் வடிவமானது இரட்டை தலைகள் மற்றும் கழுத்துகள் கொண்டுள்ளது ஆனால் உடற்பகுதி ஒரு அசாதாரண நிலையில் கனபடுவதகவும் கூறினர்.
மேலும் இவ்வாறான அரியவகை விலங்கினங்கள் ஜெனிரோ கிராமப்புற மத்திய பல்கலைக்கழகத்தில் மஸ்தோஜூலோகா ஆய்வகத்திற்கு நன்கொடை அளிக்கபட்ட பின் ஆய்வு நடத்த படுகின்றன என தெரிவித்தனர். வடக்கு ரியோ டி ஜெனிரோ மாகாண பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பேட் இரட்டையர்கள், ஆர்தீபஸின் மரபணுக்களின் "பெரிய பழம்-சாப்பிடும் பேட்ஸ்" என்று கண்டறியப்பட்டது.
இதற்க்கு முன் இதேபோல் கண்டெடுக்கப்பட்ட வெளவால்கள் ஆனது முறையே 1969 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.