இங்கிலாந்து அரசராக, மூன்றாம் சார்லஸ் முடிசூடும் நாள் நெருங்கிவிட்டது. மே 6 ஆம் தேதி நடைபெறும் இந்த வரலாற்று சிறப்பு ப்மிக்க நிகழ்ச்சிக்காக இந்திய நடிகை சோனம் கபூர் உட்பட உலகின் பல பிரபலங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. 74 வயதான சார்லஸ் மன்னர் தனது மனைவி கமிலாவுடன் மே 6-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பிரிட்டனின் அரச சிம்மாசனத்தில் அதிகாரப்பூர்வமாக அமர்வார்.
இந்த நவீன முடிசூட்டு விழாவில், பெரும்திரளாக மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, பிரிட்டன் மகாராணி எலிசபெத் மரணம் அடைந்ததை அடுத்து, நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இப்போது, ராணி எலிசபெத்தின் மகன் மூன்றாம் சார்லஸ் அரியணையில் அமரவிருக்கிறார். சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில், ஸ்டோன் ஆஃப் டெஸ்டினி என்று பெயர் பெற்ற ஒரு கல் பயன்படுத்தப்படும். இந்த கல், பல நூற்றாண்டுகளாக பிரிட்டிஷ் அரசர்கள் முடிசூடும்போது, அந்த நிகழ்வில் முக்கிய பொருளாக இருக்கும்.
மேலும் படிக்க | திருமணத்தில் இப்படியும் செய்வாங்களா? மணமகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் சடங்கு
ஸ்காட்லாந்தின் எடின்பர்க் கோட்டையில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டோன் ஆஃப் டெஸ்டினி, தற்போது, இங்கிலாந்து சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு சாட்சியாக லண்டனுக்கு வந்துக் கொண்டிருக்கிறது.
விதியின் கல் 25 ஆண்டுகளுக்குப் பிறகு எடின்பர்க் கோட்டைக்கு கொண்டு வரப்படுகிறது. இது ஸ்காட்லாந்தின் முடியாட்சி மற்றும் தேசியவாதத்தின் சின்னமாகும். சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு கொண்டு வரப்படும் இந்தக் கல்லை பாதுகாக்கும் பணியில், காவல்துறையினருடன் சேர்ந்து இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
உண்மையில் இது சாதாரண கல் அல்ல. இது பல நூற்றாண்டுகளாக பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் தொடர்பைக் கொண்டுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் கோட்டையில் 403 கிமீ பயணித்து வரும் கல்லுக்கு பாதுகாப்பு பலமாய் இருக்கிறது..
அப்படி என்ன இந்தக் கல்லுக்கு முக்கியம்? இது என்ன ராஜ மகுடமா? இல்லை கோஹினூர் வைரம் போல விலையுயர்ந்ததா? என்ற கேள்வி எழுகிறதா? ஸ்டோன் ஆஃப் டெஸ்டினி என்பது செவ்வக வடிவிலான சிவப்பு மணற்கல் ஆகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கல், ஸ்காட்லாந்தால் பராமரிக்கப்படுகிறது.
இந்த கல் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. ஆனால் 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இது ஸ்காட்லாந்து மன்னர்களின் முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்பட்டது. 1296 ஆம் ஆண்டில், இந்த கல் ஸ்காட்லாந்தின் அரச குடும்பத்திலிருந்து இங்கிலாந்தின் எட்வர்டால் பறிக்கப்பட்டது.
1399 இல் ஹென்றி IV முதல், பிரிட்டிஷ் மன்னர்களின் முடிசூட்டு விழாவில் விதியின் கல்லைப் பயன்படுத்தும் பாரம்பரியம் தொடங்கியது. அந்தப் பாரம்பரியம், சமூக ஊடக சகாப்தத்தில் நடைபெறும் முதல் பிரிட்டிஷ் முடி சூட்டு விழாவிலும் தொடர்கிறது.
மேலும் படிக்க | ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்... டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ