Watch: துபாய் துறைமுகத்தில் குண்டுவெடிப்பு: தீவிரவாத தாக்குதலா? போலீஸ் தீவிர விசாரணை

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE), துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் உள்ளூர் மக்கள் மிக அதிக அச்சத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 8, 2021, 03:48 PM IST
  • துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் பயங்கர குண்டுவெடிப்பு.
  • இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பீதி பரவியுள்ளது.
  • இது குறித்த விசாரணையில் காவல்துறை இறங்கியுள்ளது.
Watch: துபாய் துறைமுகத்தில் குண்டுவெடிப்பு: தீவிரவாத தாக்குதலா? போலீஸ் தீவிர விசாரணை  title=

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE), துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் உள்ளூர் மக்கள் மிக அதிக அச்சத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.  

இந்த குண்டுவெடிப்பு (Explosion) ஒரு டேங்கரில் ஏற்பட்ட தீ விபத்தால் நிகழ்ந்தது. இந்த டேங்கர் ஜெபல் அலி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கப்பலில் வைக்கப்பட்டிருந்தது. குண்டுவெடிப்பு பற்றிய செய்தி துபாய் ஊடக அலுவலகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்பு குழு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது

ஜெபல் அலி துறைமுகத்தில் ஒரு டேங்கரில் தீ விபத்து ஏற்பட்டதாக துபாய் (Dubai) ஊடக அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தீயை அணைக்க துபாய் சிவில் பாதுகாப்பு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ALSO READ: Saudi Arabia-UAE சர்ச்சையால் பெரும் பிரச்சனை: பெரிய ஷாக் கொடுக்குமா பெட்ரோல் விலை?

குண்டுவெடிப்புக்குப் பின்னர் அப்பகுதியில் பீதி

நேற்றிரவு கண்டெய்னரில் நடந்த வெடிப்பின் சத்தத்தை துபாயின் மெரினா பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களும் கேட்டனர். இந்த வெடிப்பின் தாக்கத்தால், வீடுகளின் ஜன்னல்களும் கதவுகளும் ஆதிரத் துவங்கின. மக்கள் பீதியின் உச்சத்திற்கு சென்றார்கள். இப்பகுதியில் இன்னும் பீதியின் சூழல்தான் உள்ளது.

போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்

கண்டெய்னரில் நடந்த குண்டுவெடிப்புக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை என்று போலீஸ் அதிகாரி கூறினார். இது குறித்த விசாரணை நடந்து வருகிறது. இதை யாராவது வேண்டுமென்றே செய்துள்ளதாக கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

”குண்டுவெடிப்பு சம்பவத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். குண்டுவெடிப்புக்கு என்ன காரணம் என்பது விரைவில் அனைவருக்கும் தெரியவரும். இந்த சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் பயங்கரவாதக் குழுவின் பங்கு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் எந்த சூழலிலும் தப்பிக்க முடியாது” என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: Israel vs Palestine: பாலஸ்தீனிய வீடுகளை இடித்த இஸ்ரேல் அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News