புதுடெல்லி: அமெரிக்கா, கோவிட் தடுப்பூசி, இஸ்ரோ என பலவிதமான செய்திகளின் கதம்பம் இது. இன்றைய உலக நடப்பு தொடர்பான முக்கிய செய்திகளின் தொகுப்பு...
- அமெரிக்கத் தேர்தல்: டொனால்ட் டிரம்ப் தனது பிரச்சாரம் 'மிகவும் சிறப்பாக' நடைபெறுவதாகக் கூறுகிறார்
- வட கொரியாவின் நீதித்துறை அமைப்பு மக்களை விலங்குகளை விட மோசமாக நடத்துகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) கவலை தெரிவிக்கிறது.
- #MeToo சிக்கல் அதிகமானதால், வேறு வழியில்லாமல் கோபன்ஹேகன் மேயர் ராஜினாமா செய்தார்
- ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதால் டெலிகிராம் செயலியை (Telegram app) தாய்லாந்து அதிகாரிகள் கட்டுப்படுத்துகின்றனர்
- பிரான்சில் ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்ட பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு போலீசார் இஸ்லாமிய குழுக்களை சோதனை செய்து வருகின்றனர்
- குழந்தைகளின் மனதை அடிமையாக்கக்கூடியதாக கருதப்படும் 'addictive' உள்ளடக்கத்தை சீனாவின் புதிய சட்டம் தடை செய்கிறது
- தன் மீதான தடை நீக்கப்பட்ட பிறகு வாங்குவதை விட அதிக ஆயுதங்களை விற்பனை செய்யப்போவதாக ஈரான் கூறுகிறது
- COVID-19 நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்களுக்கு, சில மாதங்கள் கழித்து மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதான அறிகுறிகள் ஏற்படுவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூறுகிறது.
- சீனாவின் ஷாங்காய் காட்டு விலங்கு பூங்காவில் (Shanghai Wild Animal Park) பார்வையாளர்களின் கண்ணெதிரில் முன் மிருகக்காட்சிசாலையில் பணிபுரிபவர் கொல்லப்பட்டார்
- ஆஸ்திரேலியா முதன்முறையாக மலபார் கடற்படை பயிற்சியில் சேர உள்ளது
தொடர்புடைய செய்தி | இந்தியாவின் பாதி மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படலாம் அதிர்ச்சி தகவல்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR