UAE Unemployment: ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டினருக்கும் வேலையின்மை காப்பீடு உண்டா

குவைத், கத்தார், ஓமன் மற்றும் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் வேலையில்லாத குடிமக்களுக்கு வேலையின்மை ஆதரவு உள்ளது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 11, 2022, 06:33 AM IST
  • வளைகுடா நாடுகளில் வேலை
  • வெளிநாட்டினருக்கு வேலையின்மை காப்பீடு
  • வேலையின்மைக்கான காப்பீடு யு.ஏ.யூவில் அறிமுகமாகிறது
UAE Unemployment: ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டினருக்கும் வேலையின்மை காப்பீடு உண்டா title=

ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் வேலையில்லாத் திண்டாட்டக் காப்பீடு நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த செய்தியை அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரே துபாயின் ஆட்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் அந்நாட்டின் குடிமக்கள் மற்றும் குடியுரிமை இல்லாதவர்கள் என இரு தரப்பினருக்கும் இந்த திட்டம் இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 

குவைத், கத்தார், ஓமன் மற்றும் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் குடிமக்களுக்கு வேலையில்லை என்றால், சில வகையான வேலையின்மை ஆதரவு உள்ளது. 

வளைகுடா நாடுகளில், வெளிநாட்டினர் வேலைவாய்ப்பு அடிப்படையில் வசிக்க அனுமதி கொடுக்கப்படுகிறது. அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வேலை போய்விட்டால், தொழிலாளி நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

மேலும் படிக்க |  பற்றி எரிகிறது இலங்கை; போராட்டக்காரர்களை தாக்கிய அரசு ஆதரவாளர்கள் 

இதில் சில விதிவிலக்குகளும் உண்டும். பஹ்ரைன் நாட்டில் குடியுரிமை பெறாத ஆனால், அங்கு பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் வேலையில்லாதவர்களுக்கான காப்பீடு உள்ளது. 

உலகில் அதிக அளவிலான வெளிநாட்டு மக்கள் பணிபுரியும் நாடுகளில் வளைகுடா நாடுகள் பிரபலமானவை.

இந்த நிலையில், தற்போது வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதும் மற்றும் வேலையிழப்பு அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் வேலையில்லாத் திண்டாட்டக் காப்பீடு நடைமுறைக்கு வரவுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் அமைச்சரவை திங்கள்கிழமையன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டது.

மேலும் படிக்க | கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்... கை விரித்த சீனா

பிராந்தியத்தில் பொருளாதாரப் போட்டி தீவிரமடைந்து வருவதால் திறமை மற்றும் முதலீட்டை ஈர்ப்பதற்காக வளைகுடா நாடு அறிமுகப்படுத்திய சமீபத்திய சீர்திருத்தமாக இது பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாட்டின் அமைச்சரவை முடிவை மேற்கோள் காட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரும், துணைத் தலைவருமான ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூம் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்த டிவிட்டரின் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலையின்மைக்கான காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்கள், அந்நாட்டில் குறிப்பிட்ட காலத்திற்கு வேலையில்லாமல் இருந்தாலும், அதற்கான இழப்புத் தொகையைப் பெறுவார்கள் என்று கூறினார். 

"தொழிலாளர் சந்தை போட்டித்தன்மையை வலுப்படுத்துவதும், தொழிலாளர்களுக்கு ஒரு சமூக குடையை வழங்குவதும், அனைவருக்கும் நிலையான பணிச்சூழலை உருவாக்குவதும் நோக்கம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியுரிமை இல்லாத குடிமக்கள் இருவருக்கும் இந்த புதிய திட்டம் சமமாகப் பொருந்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

வளைகுடா நாடுகளில், வெளிநாட்டினர் வேலைவாய்ப்பு அடிப்படையில் வசிக்க அனுமதி உள்ளது மற்றும் வேலை போய்விட்டால், வெளிநாட்டு தொழிலாளி நாட்டை விட்டு வெளியேற வேண்டும், அங்கு வசிக்க முடியாது.

மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News