வாஷிங்டன்: அமெரிக்காவில் செல்வாக்குமிக்க இந்திய-அமெரிக்க வாக்காளர்களைக் கவரும் நோக்கில், டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் வீடியோ விளம்பரத்தை வெளியிட்டுள்ளது, இது பிரதமர் நரேந்திர மோடியின் உரைகள் மற்றும் அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உரைகள் அடங்கிய காட்சிகள் உள்ளன.
America enjoys a great relationship with India and our campaign enjoys great support from Indian Americans! pic.twitter.com/bkjh6HODev
— Kimberly Guilfoyle (@kimguilfoyle) August 22, 2020
இந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் Trump இந்திய பயணம் மேற்கொண்ட போது பிரதமர் மோடியும் ட்ரம்பும் அகமதாபாத்தில் பெரும் கூட்டத்தில் உரையாற்றினர். ட்ரம்ப் தனது இந்திய பயணத்தில் அவரது மனைவி மெலனியா, மகள் இவான்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் அவரது நிர்வாகத்தின் உயர்மட்ட தலைவர்கள் ஆகியோர் உடன் இருந்தார்.
இந்த வீடியோ வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே வைரலாகியது.
"இன்னும் நான்கு ஆண்டுகள்" என்ற தலைப்பில் 107 விநாடிகள் கொண்ட வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய-அமெரிக்கர்களிடையே பிரதமர் மோடி மிகவும் பிரபலமானவர். 2015 ஆம் ஆண்டில் மேடிசன் ஸ்கொயர் கார்டனிலும் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிலிக்கான் பள்ளத்தாக்கிலும் அவர் உரையாற்றினார், இரண்டு கூட்டத்திற்கும் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்,
கடந்த செப்டம்பரில் ஹூஸ்டனில் அவரது "ஹவுடி மோடி" நிகழ்ச்சியில், வரலாறு படைக்கும் வகையில், 50,000 பேர் கலந்து கொண்டனர். வரலாற்று சிறப்பு மிக்க பேரணியில் மோடியுடன் இணைந்து உரையாற்ற டிரம்ப் ஹூஸ்டனுக்கு வந்தார்.
ALSO READ | கத்திரிக்காய் முற்றியதும் கடைக்கு வந்தது... தாவூத் முகவரியை பாகிஸ்தான் வெளியிட்டது..!!!
பிரதமர் மோடி டிரம்பை "எனது குடும்பத்தின் உறுப்பினர்" அறிமுகப்படுத்திய காட்சிகள் இடம்பெறுகின்றன. பின்னர், விளம்பரத்தின் இரண்டாம் பாகத்தில் இந்த பிப்ரவரியில் அகமதாபாத்தில் டிரம்ப் உரையாற்றிய காட்சிகள் இடம் பெறுகின்றன.
"அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது. அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது. மேலும் அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக இருக்கும்" என்று டிரம்ப் அந்த பிரச்சார வீடியோவில் கூறுகிறார், அதில் நான்கு மில்லியன் இந்திய-அமெரிக்கர்களின் பங்களிப்பை அவர் பாராட்டுகிறார்.
ALSO READ | ஹகியா சோபியாவிற்கு பிறகு, கோரா தேவாலயத்தை மசூதியாக மாற்றிய துருக்கி அதிபர்