திருமணம் என்பது ஒரு திருவிழா போல் கொண்டாடப்படுகிறது. மணமகள் ஆயத்தமாகி மணமகனிடம் வந்த பிறகு, மாலை அணிவித்து தீவலம் வந்து தாலி கட்டுவது இந்தியாவில் இந்துக்களின் திருமணச்சடங்கு. கல்யாணக் கோலத்தில் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் வாழ்நாள் இலட்சியமாக இருப்பதும், அதற்காகவே அவர்கள் தங்கள் வாழ்வை தத்தம் செய்வதும் இந்தியாவில் இயல்பான ஒன்று.
பொதுவாக, எந்த நாடாக இருந்தாலும், திருமணத்தன்று மணமக்கள் அழகாக இருப்பது என்பது உலகம் அறிந்த உண்மை. அழகாக இருப்பவர்களும், தங்கள் திருமணத் தோற்றத்திற்காக மெனக்கெடுவதும், அதற்கான லட்சங்களை செலவிடுவதும் உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் வழக்கம்.
ஆனால் திருமணச் சடங்குகளில், மணமக்கள் அழகாக இருக்கக்கூடாது என்று கங்ககணம் கட்டிக் கொண்டு அழுக்காக்கும் சடங்குகள் செய்வதைப் பார்த்ததுண்டா? திருமணத்தின் போது, அவர்களை வாழ்த்த கூடியிருக்கும் உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் என அனைவரும் புதுமணத் தம்பதிகள் மீது குப்பைக்கூளங்களையும்,. சேற்றையும் வீசுவதை கேள்விப்பட்டதுண்டா?
மேலும் படிக்க | தலைசிறந்த திருமண தலமாக உருவெடுக்கவுள்ள மாமல்லபுரம்: முழு முனைப்பில் பணிகள்
இது எங்க வழக்கம் என்று மார்தட்டிக் கொள்ளும் விசித்திரமான சடங்குகள் எந்த நாட்டில் நடைபெறுகிறது என்று தெரியுமா?
புதுமணத் தம்பதிகள் மீது அழுகிய முட்டை வீசும் சடங்கு
புதிதாக திருமணமான தம்பதிகள் மீது முட்டைகளை வீசுவது அல்லது சேற்றைப் பூசுவது பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான், இந்த சடங்கு எங்கு நடைபெறுகிறது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்காட்லாந்தில் நடக்கும் பாரம்பரிய திருமணச் சடங்கு இது. இந்த பாரம்பரியம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
திருமணத்திற்கு அதிக முக்கியத்துவம்
பண்டைய காலத்தில், ஸ்காட்லாந்து மக்கள் திருமணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இரண்டு குடும்பங்களை ஒன்றிணைப்பதற்கும், இரு குலங்களுக்கிடையில் மேலும் உறவை ஏற்படுத்துவதற்கும், இணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் இது ஒரு சிறந்த வழியாகக் கருதப்பட்டது திருமணச் சடங்குகள்.
தனித்துவமான சடங்கு
இருப்பினும், திருமணத்தின் போது ஒரு தனித்துவமான சடங்கு செய்யப்பட வேண்டும், அதன் உண்மையான நோக்கம் என்ன என்பது இன்று மிகவும் மர்மமாக உள்ளது. இது "ப்ளாக்கனிங் தி ப்ரைட்" என்று அழைக்கப்படுகிறது. இதில் புதுமணத் தம்பதிகள் மீது அழுகிய காய்கறிகள், சேற்றை வீசுகின்றனர். முகத்தில் அழுக்கை பூசுகின்றனர்.
அழுகிய காய்கறிகள் மற்றும் முட்டையை உடலில் வாங்கி ஆசீர்வாதம்
திருமணமான புதுமணத் தம்பதிகள் மீன் குழம்பு, தார், பறவை இறகுகள், கெட்டுப்போன பால், அழுகிய முட்டைகள், மாவு, சேறு அல்லது அதுபோன்ற சில வீணாணப் பொருட்களை வீசுகின்றனர். அதன் பிறகு, அதே கோலத்தில் தம்பதியர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார்கள்.
புதுமணத் தம்பதியர் ஊர்வலம்
எனவே, இந்தச் சடங்கின்போது, கல்யாணம் செய்துக் கொண்டோம், முட்டை, தக்காளியால் அடி வாங்கினோம், குளித்து சுத்தமாகிவிட்டோம் என்று இருக்க முடியாது. நீண்ட நேரம் அழுக்காகவே இருக்க வேண்டும். அப்படியே ஊர்வலமாக செல்லவும் வேண்டும்.
விசித்திரமான சடங்கின் நோக்கம்
இந்த விசித்திரமான சடங்கின் சரியான நோக்கம் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் இந்த நடைமுறை கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்திற்கு முந்தையது. இதேபோன்ற நடைமுறை வடக்கு அயர்லாந்திலும் உள்ளது, இது ஒரு இரகசிய நோக்கத்துடன் கூடிய திருமண்ச் சடங்காகவே இருந்து வருகிறது.
மேலும் படிக்க | Aadhaar Card Photo Change: ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற எளிய வழிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ