வாஷிங்டன் : சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் வெற்றி பெற்று சமீபத்தில் அதிபராக பதவியேற்றார்
இந்நிலையில், ஜோ பைடன் (Joe Biden) வெற்றியை உறுதிபடுத்த ஜனவரி 6, 2021 அன்று பிரநிதிநிதிகள் டசபை கூட உள்ள நிலையில், கேபிடல் ஹில் வளாகத்தில் கூஇய டிரம்ப ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறைக்கு டிரம்ப் (Donald Trump)காரணம் என குற்றம் சாட்டப்பட்டு கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானத்தில், டிரம்பின் குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்கள் 222 ஜனநாயகக் கட்சியினர் அவருக்கு எதிராக வாக்களித்ததை அடுத்து. 232-197 என்ற வாக்கு எண்ணிக்கையில் பிரதிநிதிகள் சபையில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய அந்தத் தீர்மானத்தின் மீது, தற்போது, பிப்ரவரி 8ம் தேதி செனட் சபையில், விவாதம் நடக்க உள்ளது.
தற்போது அதிபர் பதவியில் இருந்து டிரம்ப் வெளியேறியுள்ள நிலையில், செனட் சபையில், ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும், தலா, 50 உறுப்பினர்கள் உள்ளனர். டிரம்ப் மீதான கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற, செனட் சபையின், மூன்றில், இரண்டு பங்கு, உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்நிலையில் குடியரசு கட்சியைச் சேர்ந்த, 17 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். இந்நிலையில் கண்டன தீர்மானம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ALSO REA D| டிரம்பிற்கு எதிராக கண்டன தீர்மானம்.. அடுத்தது என்ன..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR